கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிர்வாகிகள் இருவரையும் விடுவித்து டெல்லி மாஜிஸ்திரேட் கோர்ட் உத்தரவு
டெல்லி: டெல்லி ஜந்தர் மந்தர் இனி போராட்ட களம் இல்லை என மத்திய அரசு அறிவித்தது. இதனை மீறி ஜந்தர் மந்தரில் போராட முயன்ற கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளரன சவுரவ் தாஸ் மற்றும் அஸ்தோஸ் ரங்கா கைது செய்யப்பட்டனர். இருவரின் நீதிமன்ற காவலும் இன்றுடன் முடிந்த நிலையில், தொடர்ந்து அவர்களது நீதிமன்ற காவலை நீட்டிக்காத மாஜிஸ்திரேட்டு நீதிபதி, இருவரையும் சிறையில் இருந்து விடுவிக்க உத்தரவிட்டார்.
எஸ்.ஐ.ஆர் விவகாரம் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கரப்பான் பூச்சி ஜனதா கட்சியும் போராட்டத்தில் குதித்த நிலையில், டெல்லி ஜந்தர் மந்தரில் போராடுவதற்கு தடை விதிக்கப்பட்டது.

தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட வந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர். டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர்ச்சியாக போராட்டம் நடைபெற்று வந்த நிலையில், ஜந்தர் மந்தர் இனி போராட்ட களம் இல்லை என்று டெல்லி அரசு அறிவித்தது. இந்த நிலையில், டெல்லி ஜந்தர் மந்தர் பகுதிக்குள் தடையை மீறி போராட முயன்றதாக கூறி கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளராக சவுரவ் தாஸ் மற்றும் அஸ்தோஸ் ரங்கா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த 14 ஆம் தேதி கைது செய்யப்பட்ட கரப்பான் பூச்சி ஜனதா கட்சி நிர்வாகிகள் நீதிமன்றக்காவலில் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். இதற்கிடையே தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி டெல்லி ஐகோர்டை இருவரும் நாடினர். எனினும், சில குறைபாடுகள் இருந்ததால் அந்த மனுவை வாபஸ் பெறுவதாக கூறியிருந்தனர்.
இந்த நிலையில் இருவரின் நீதிமன்ற காவலும் இன்றுடன் முடிந்த நிலையில், டெல்லி சிறப்பு எக்ஸிகியூட்டிவ் மாஜிஸ்திரேட்டு முன்பாக சவுரவ் தாஸ் மற்றும் அஸ்தோஸ் ரங்கா ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது பிணை உத்தரவாத ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டன.
இதையடுத்து இருவரது நீதிமன்ற காவலையும் நீட்டிக்காத மாஜிஸ்திரேட்டு நீதிபதி, இருவரையும் சிறையில் இருந்து விடுவிக்க உத்தரவிட்டார். இதன் மூலம் இருவரும் சிறையில் இருந்து விடுதலையாக உள்ளனர். முன்னதாக தீபாவளி வரை தங்கள் போராட்டத்தை ஒத்திவைப்பதாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications
