பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இடஒதுக்கீடு.. 2 நீதிபதிகள் அமர்வாக குறைத்து நாளை விசாரணை
டெல்லி: பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு மருத்துவ மேற்படிப்புக்கான இடஒதுக்கீடு வழங்கும் வழக்கில் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு பதிலாக 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு உச்சநீதிமன்றத்தில் நாளை (ஜன.6) விசாரிக்கிறது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு மருத்துவ மேற்படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீடு இடங்களில் 10 சதவீத இடங்களை வழங்கும்படி தேசிய தேர்வுகள் முகமை கடந்த ஜூலை 30ஆம் தேதி பிறப்பித்தது.

இதை எதிர்த்து மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த 10 சதவீத இடஒதுக்கீட்டுக்கான வருமான உச்சவரம்பு (ரூ.8 லட்சம்) எதன் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டது என்பது பற்றிய விரிவான பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு கடந்த அக்டோபர் மாதம் 7ம் தேதி உத்தரவிட்டது.
இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சந்திரசூட், ஏ.எஸ். போபண்ணா, சூர்ய காந்த் ஆகிய 3 பேர் கொண்ட அமர்வு விசாரணை செய்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி சந்திரசூட் "ரூ 8 லட்சம் வருமான உச்சவரம்பு எந்த அளவுகோல் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டது. இதை அமல்படுத்தும் முன்பாக எடுக்கப்பட்ட நடைமுறைகள் என்ன, அதற்கான புள்ளி விவரங்கள் எதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது.
ஓபிசிபிரிவிலும் ரூ 8 லட்சத்திற்கும் குறைவான வருமானத்தில் உள்ளவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் இந்த இடஒதுக்கீட்டால் பாதிக்கப்படுவார்கள். இந்த இடஒதுக்கீட்டை நாங்கள் எதிர்க்கவில்லை. எதன் அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது என்பதை விளக்க வேண்டும் என சரமாரியான கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இந்த வழக்கை ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் விரைந்து விசாரிக்க வேண்டும் என மத்திய சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா சார்பில் உச்சநீதிமன்றத்தில் வாதம் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கு மேற்கண்ட 3 நீதிபதிகள் கொண்ட அமர்வால் இன்று விசாரிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் 3 பேர் கொண்ட அமர்வை இரண்டாக குறைத்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என் வி ரமணா இன்றைய தினம் உத்தரவிட்டார். அதன்படி இந்த வழக்கை நீதிபதிகள் சந்திரசூட் மற்றும் ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் கொண்ட இரு அமர்வு நாளை விசாரணை நடத்துகிறது. அது போல் மருத்துவ மேற்படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு குறித்த மனுவும் நாளை விசாரணைக்கு வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications