இரு கனிமொழிகளால் பிரச்சினை.. கூட்டம் கூடி புதிய முடிவுக்கு வந்த வடமாநில எம்பிக்கள்
டெல்லி: நாடாளுமன்றத்தில் இரு கனிமொழிகளின் பெயர்களை உச்சரிப்பதில் வடமாநில எம்பிக்களுக்கு பிரச்சினை இருப்பதால் எம்பிக்கள் ஆலோசனை நடத்தி ஒரு முடிவுக்கு வந்துள்ளனர்.
பொதுவாக தமிழகத்தில் உள்ளவர்களின் பெயர்களை சரியாக உச்சரிப்பதில் வடமாநிலத்தவர்களுக்கும் வெளிநாட்டினருக்கும் சறுக்கல் ஏற்படும். ஆனால் நமக்கு அது போல் எந்த சறுக்கலும் ஏற்படாமல் சரியாக மற்றவர்களின் பெயர்களை உச்சரிப்போம்.
நாடாளுமன்றத்தில் இதுவரை கனிமொழி பேசினார், கனிமொழி போராட்டம், கனிமொழி மாஸ் என்றால் அது கருணாநிதியின் மகள் கனிமொழியைதான் குறிக்கும். நாடாளுமன்ற பதிவேடுகளில் கூட தனது பெயரை கனிமொழி கருணாநிதி என்றுதான் பதிவு செய்துள்ளனர்.

இரு இடங்கள் காலி
இந்த நிலையில் அதிமுக எம்பிக்களாக இருந்த கே. பி. முனுசாமி மற்றும் கு வைத்திலிங்கம் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு சட்டசபை தேர்தலில் போட்டியிட்டனர். அவர்கள் தற்போது எம்எல்ஏக்களாக பதவி வகித்து வருகிறார்கள். இதனால் ராஜ்யசபாவில் இரு பதவிகள் காலியாக இருந்தன.

மாநிலங்களவையில்
இதையடுத்து பதவிதற்போது மாநிலங்களவைக்கு திமுக சார்பில் கனிமொழி சோமு, ராஜேஷ்குமார் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டு அவர்கள் போட்டியின்றி கடந்த செப்டம்பர் மாதம் தேர்வு செய்தனர். இதையடுத்து அவர்களும் தற்போது மாநிலங்களவையில் உள்ளனர்.

நாடாளுமன்றக் குழு
கனிமொழி சோமு தற்போது சுகாதாரத் துறையின் நாடாளுமன்றக் குழுவின் உறுப்பினராக கனிமொழி சோமுவும் செந்தில்குமாரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அது போல் உரம், வேதிப்பொருள் துறையின் நாடாளுமன்ற குழு தலைவராக திமுக மக்களவை துணைத் தலைவர் கனிமொழி எம்பி நியமிக்கப்பட்டுள்ளார்.

யோசனை
இரு கனிமொழிகளும் வெவ்வேறு பொறுப்புகளுக்கு தேர்வாகியுள்ளதால் வடமாநில எம்பிக்களுக்கு அடையாளம் கண்டு கொள்வதிலும் அவர்களது பெயரை உச்சரிப்பதிலும் தடுமாற்றம் இருந்தது. இதையடுத்து இவர்கள் இருவரையும் எந்த வித குழப்பமும் இல்லாமல் எப்படி அழைப்பது என யோசித்தனர் எம்பிக்கள்.

ராஜ்யசபா கனிமொழி
இகதையடுத்து கனிமொழி என்.வி. சோமு ராஜ்யசபா உறுப்பினராக உள்ளதால் அவரை ராஜ்யசபா கனிமொழி என்றும் கருணாநிதியின் மகள் கனிமொழி மக்களவை உறுப்பினர் என்பதால் அவரை லோக்சபா கனிமொழி என அழைக்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.












Click it and Unblock the Notifications