டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பரபரப்பு.. இரட்டை இலை சின்னம் யாருக்கு.. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு நாளை விசாரணை

Google Oneindia Tamil News

டெல்லி: இரட்டை இலை சின்னம் தொடர்பாக நாளை உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது.

இரட்டை இலைக்கு டிடிவி தினகரன், சசிகலா தரப்பு உரிமை கோரிய நிலையில், 2017 நவம்பர் மாதம் தேர்தல் ஆணையம் வழங்கிய தீர்ப்பில், இரட்டை இலை சின்னம் அதிமுகவின் ஓ.பி.எஸ். இபிஎஸ் தரப்புக்குதான் சொந்தம் என்று தீர்ப்பு வழங்கியது.

Two leaves symbol case on Supreme court

ஓபிஎஸ்-இபிஎஸ் அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியதை எதிர்த்து டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோர் தாக்கல் செய்த மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 28ல் தள்ளுபடி செய்தது. ஓ.பன்னீர் செல்வம் அணிக்குதான், இரட்டை இலை சின்னம் சொந்தம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.

கள்ளக்குறிச்சி எனக்குத்தான்.. இல்லை எனக்குத்தான்.. முட்டி மோதும் பாமக, தேமுதிக. குழப்பத்தில் அதிமுககள்ளக்குறிச்சி எனக்குத்தான்.. இல்லை எனக்குத்தான்.. முட்டி மோதும் பாமக, தேமுதிக. குழப்பத்தில் அதிமுக

இதை எதிர்த்து டிடிவி தினகரன் தரப்பு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு நாளை விசாரிக்கப்பட உள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், தீபக் குப்தா, சஞ்சீவ் கண்ணா ஆகிய மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு நாளை இதுபற்றி விசாரிக்க உள்ளது.

லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில், வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

English summary
TTV Dhinakaran's plea against allotment of 'two leaves' party symbol to EPS-OPS faction will comes up tomorrow in Supreme Court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X