டெல்லியில் பூட்டிய அறைக்குள் 2 பெண் சடலங்கள் - கொலைநகரமாக மாறி வரும் தலைநகரம்
டெல்லியில் அடுத்தடுத்து பல கொலைகள் நடந்து வருகின்றன. குடும்பத்தகராறில் கொலை, நகை பணத்திற்காக கொலை, கள்ளக்காதல் கொலை என பல கொலைகள் நடந்து வருகின்றனர். பூட்டிய அறைக்குள் இரண்டு பெண் சடலங்கள் கண்டுபிடிக்
டெல்லி: நாட்டின் தலைநகரமான டெல்லியில் அடுத்தடுத்து கொலைகள் நடைபெறுவதால் அது கொலைநகரமாக மாறி வருவதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கடந்த ஒருவாரத்தில் மட்டும் பல்வேறு கொலைகள், கொள்ளைகள் நடைபெற்று அச்சுறுத்தி வந்த நிலையில் நேற்று பூட்டிய அறைக்குள் இருந்து இரண்டு பெண் சடலங்களை போலீசார் கண்டுபிடித்துள்ளது பொதுமக்களை மீண்டும் பீதியடைய வைத்துள்ளது. கொலைசெய்யப்பட்ட ஒரு பெண்ணின் கணவரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஜெய்த்பூரில் சௌரவ் விஹார் பகுதியில் இருந்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. காலி நம்பர் 7ல் பூட்டிய அறைக்குள் இருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் தங்களால் அங்கு வசிக்க முடியவில்லை என்றும் போன் வரவே போலீஸ் வந்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தது.
அங்கே பார்த்த காட்சி அனைவரும் அதிர்ச்சியடையும் வகையில் இருந்தது. 30 வயது மதிக்கத்தக்க இரண்டு பெண்களின் கழுத்து துணிகளால் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தனர்.

டெல்லி பெண்கள் கொலை
கொலை செய்யப்பட்ட அந்த பெண்களின் பெயர் கிஸ்மத், ஜாப்னா என்று போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதில் கிஸ்மத் திருமணமானவர். அவருக்கு கணவரும் 12 வயதான ஒருமகனும் இருக்கின்றனர். இவர்களுடன் ஜாப்னா வசித்து வருகிறார். கடந்த இரண்டு நாட்களாகவே அவர்கள் வசித்த வீடு பூட்டப்பட்டிருக்கிறது ஆட்கள் யாரும் நடமாட்டம் இல்லை.

கணவன் மகன் மாயம்
கிஸ்மத்தின் கணவனையும் அவரது மகனையும் காணவில்லை. இந்த கொலைகளை விசாரித்து வரும் போலீசார் கிஸ்மத்தின் கணவருக்கும் இதில் தொடர்பிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் தேடி வருகின்றனர். மகன் என்னவானான் என்பதும் மர்மமாக இருக்கிறது.

அடுத்தடுத்த பீதி
தலைநகர் டெல்லியில் அடுத்தடுத்து நடைபெறும் கொலைகள் மக்களை பீதியடைய வைத்துள்ளது. கடந்த வாரம் டியூசன் ஆசிரியர் ஒருவர் தனது மனைவி குழந்தைகளை கத்தியால் அறுத்து கொலை செய்தார். அது குடும்பத்தகராறு சந்தேகத்தில் நடந்த கொலை என்று தெரியவந்தது.

வயதான தம்பதியர் கொலை
இதே போல வசந்த விஹார் பகுதியில் மூத்த தம்பதியரும் அவர்களுக்கு பணிவிடை செய்து வந்த நர்சிங் பெண்ணும் கொலை செய்யப்பட்டிருந்தனர்.
இந்த கொலை பணம் நகைக்காக நடந்த கொலை. குற்றவாளிகளை 24 மணிநேரத்தில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிசிடிவி காட்சியில் பதிவான உருவங்களை வைத்து குருகிராமில் போலீசார் கைது செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கொள்ளைக்காக கொலையா
இந்த இருவரும் பணம் நகைகளை கொள்ளையடித்து விட்டு நர்சிங் உதவியாளர் குஷ்பு நாடியாவின் மேல் போட்டு விட்டு தப்பிவிடலாம் என்று நினைத்தனர். ஆனால் நர்சிங் உதவியாளர் இதனை பார்த்து விடவே அந்த பெண்ணை கொள்ளையர்கள் கொன்றனர். இந்த கொலைக்கு சாட்சியம் இருக்கக் கூடாது என்று மூத்த தம்பதியரையும் கொடூரமாக தாக்கி கொன்றுள்ளனர்.

கொலைநகரம்
தலைநகர் டெல்லியில் அடுத்தடுத்து தொடர் கொலைகள் நடைபெறுவதால் அம்மாநில முதல்வர் காவல்துறையினர் மீது குற்றம் சாட்டியுள்ளார். பொதுமக்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகவும் மக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக யார் வீட்டு கதவை தட்டுவார்கள் என்றும் பதிவிட்டிருந்தார். தலைநகரம் கொலை நகரமாக மாறி வருவதால் டெல்லிநகரவாசிகள் பீதியடைந்துள்ளனர்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
ரொம்ப அசால்ட்டா இருந்துருக்காங்க! விசாரணை அதிகாரியின் விசித்திர நடைமுறை! போலீஸை விளாசிய நீதிமன்றம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications