தனிஷா கையை பிடித்த டாக்சி டிரைவர்.. கார் கதவை லாக் செய்து.. கூடுதல் பணம் கேட்டு அத்துமீறல்!
டெல்லி: டெல்லி விமான நிலையத்திலிருந்து குருகிராம் சென்ற பெண்ணிடம், செயலியில் காட்டப்பட்ட கட்டணத்தைவிட அதிக பணம் கேட்டு டிரைவர் மிரட்டியுள்ளார். கார் கதவுகளை லாக் செய்து மிரட்டிய அந்த டிரைவல், பின்னர் அவரது வீட்டுக்கே சென்று மிரட்டியதாக அந்த பெண் குற்றஞ்சாட்டியுள்ளார். அதிகாலை 4.45 மணியளவில் இந்த சம்பவம் டந்த போது உதவி மையத்தையும் தொடர்பு கொள்ளவில்லை என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
இந்தக் காலத்தில் நம்மில் பெரும்பாலானோர் ஊபர் அல்லது ஓலா மூலமாகவே டாக்சியை புக் செய்கிறோம். பெரும்பாலும் இதில் சிக்கல் வருவதில்லை என்றாலும் சில நேரங்களில் டிரைவர்களின் நடத்தை சர்ச்சையாகிறது. அப்படியொரு மோசமான சம்பவம் தான் டெல்லி விமான நிலையத்தில் நடந்துள்ளது. தனக்கு நேர்ந்த மோசமான அனுபவம் குறித்து தனிஷா சர்மா என்ற பெண் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊபர்
தனிஷா, டெல்லி விமான நிலையத்திலிருந்து குருகிராம் செல்வதற்காக உபேர் மூலம் டாக்ஸியை புக் செய்துள்ளார். செயலியில் பயண கட்டணமாக சுமார் ரூ.625 காட்டப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். ஆனால் பயணம் முடிந்ததும், ஓட்டுநர் ரேபிடோ செயலியில் ரூ.1,479 என காட்டும் கட்டணத்தின் ஸ்கிரீன்ஷாட்டை காண்பித்து, ரூ.1500ஐ கொடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
இருப்பினும் ஸ்கிரீன் ஷாட் ரேபிடோ செயலியிலிருந்து எடுக்கப்பட்டது என்றும் உபேர் செயலியில் ரூ.625 மட்டுமே கட்டணமாக காட்டியதாக தனிஷா விளக்கியுள்ளார். இருப்பினும், அதை ஏற்க மறுத்த ஓட்டுநர் கூடுதல் கட்டணம் கேட்டு வாக்குவாதம் செய்துள்ளார். இருப்பினும், செயலியில் காட்டிய கட்டணத்தை மட்டுமே செலுத்துவேன் என கூறிய தனிஷா, ரூ.625ஐ மட்டுமே டிரைவருக்கு அனுப்பியுள்ளார். இதுவரை கூட எல்லாம் ஓகே தான். ஆனால், இதன் பிறகு நடந்தது தான் மிக மோசம்!
கையை பிடித்து அத்துமீறல்
பணம் செலுத்திய பிறகு தனது உடைமைகளை எடுக்க அவர் முயன்றபோது, ஓட்டுநர் தனது கையை பிடித்ததாகவும், உடைமைகள் வைக்கப்பட்டிருந்த கதவை மூடியதாகவும் தனிஷா குற்றம்சாட்டியுள்ளார். பின்னர் ஒருவழியாக பைகளை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் செல்ல முயன்றபோதும், டிரைவர் தன்னை பின்தொடர்ந்து வந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், வீட்டின் கதவை வலுக்கட்டாயமாக திறந்து, தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், தன்னை உள்ளே செல்லவிடாமல் தடுத்ததாகவும் கூறியுள்ளார். தான் வீட்டுக்குள் சென்று கதவை பூட்டிய பிறகும், ஓட்டுநர் கேட் மீது ஏற முயன்று கொலை மிரட்டல் விடுத்ததாக தனிஷா தனது குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த சம்பவம் அதிகாலை சுமார் 4.45 மணியளவில் நடந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
@Uber @Uber_India @UberIN_Support @Uber_Support i landed at delhi airport today and had one of the most terrifying experiences of my life with an uber driver. i'm still shaken.i booked an uber to gurgaon for a 20-minute ride. the fare shown on my uber app was around ₹625. after the trip, the driver showed me a screenshot from rapido quoting ₹1,479 and demanded that i pay that amount instead. when i pointed out that this was a rapido screenshot and not an uber screenshot, he said, “iss route ka itna hi hota hai.”i paid the ₹625 that was shown on my uber app. what followed was genuinely frightening.he locked the car and refused to let me take my luggage out unless i paid ₹1,479. when i tried retrieving my belongings, he held my arm and shut the front-seat window where my luggage was, trying to stop me from taking it out.i somehow managed to get my luggage and tried to enter my house. he followed me, forced the gate, abused me horribly and wouldn't let me go inside peacefully. i finally managed to get inside and lock the door. he then started climbing the gate while hurling abuses and threatening my life.all of this happened around 4:45 am in gurgaon, when i'd just landed and was simply trying to get home safely.and it gets worse. i'm trying to reach uber's safety support, and the safety support option isn't available to me. i'm dealing with a terrifying situation involving physical aggression and life threats, and i can't even get through to the platform's safety team.this wasn't a fare dispute anymore. this was intimidation, physical aggression and a terrifying violation of my safety at my own doorstep.@Uber_Support @Uber_India @UberIN_Support @Uber, i need an urgent human response, a proper investigation and concrete action. please preserve the trip and driver records and tell me how this is being addressed.i've used cabs to get around in different countries and never imagined i'd feel this unsafe trying to get home in my own country. how am i supposed to trust a service that i booked specifically to get home safely?driver name: JAMIL JAHID KHAN
— Tanisha Sharma (@tanishasharmax) October 26, 2026
உதவி இல்லை
சம்பவத்துக்கு பிறகு உபேர் நிறுவனத்தின் பாதுகாப்பு பிரிவை தொடர்புகொள்ள முயன்றபோது, செயலியில் அந்த ஆப்ஷன் தனக்கு காட்டவில்லை என்றும் தனிஷா புகார் தெரிவித்துள்ளார். பயணியின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்ட நேரத்தில் தக்க நேரத்தில் உதவியை பெற முடியாதது குறித்தும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். உபேர் சப்போர்ட்டை டேக் செய்துள்ளார். மேலும், பயண விவரங்கள் மற்றும் ஓட்டுநர் தொடர்பான விவரங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.
இதற்குப் பதிலளித்த உபேர் சப்போர்ட், தனிஷாவின் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக விரிவான மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது. ஆனால், ஓட்டுநர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து நிறுவனம் பொதுவெளியில் விளக்கம் அளிக்கவில்லை.
நெட்டிசன்கள்
தனிஷாவின் பதிவுக்கு நெட்டிசன்கள் பலரும் பல்வேறு கருத்துகளை பதிவிட்டு வருகிறார்கள். இது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளிக்க வேண்டும் என்றும், பயணிகளின் பாதுகாப்பு தொடர்பான புகார்கள் மீது டாக்சி நிறுவனங்கள் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலர் வலியுறுத்தியுள்ளனர்.


Click it and Unblock the Notifications
