ரூ.62 கட்டணத்திற்கு.. ரூ.7.66 கோடி பில்! நிலவுக்கு போனால் கூட இவ்வளவு ஆகாதே.. ஊபர் ஆட்டோ பயணி ஷாக்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லியில் ஊபர் ஆட்டோ புக் செய்த இளைஞருக்கு ரூ.7.66 கோடிக்கு பில் வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி போன்ற பெரு நகரங்களில் ஊபர் வாகன சேவைகள் தவிர்க்க முடியாததாக இருக்கிறது. இதனால் ஒவ்வொரு நாளும் இந்த சேவைக்கான தேவை அதிகரித்து வருகிறது. இந்நிலையில், டெல்லியில் ஊபர் ஆட்டோ புக் செய்த இளைஞருக்கு ரூ.7.66 கோடிக்கு பில் வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Uber sends Rs 7 66 crore bill for Rs 62 fare shocks users

டெல்லி நொய்டாவை சேர்ந்தவர் தீபக் தெங்குரியா. இவர் வழக்கமாக ஊபர் ஆட்டோவை பயன்படுத்தும் வாடிக்கையாளர். இந்நிலையில் நேற்று வழக்கம் போல ஆட்டோவை புக் செய்திருக்கிறார். புக் செய்யும் போது ரூ.62 என கட்டணம் காட்டியிருக்கிறது. அதுவரை எந்த சிக்கலும் ஏற்படவில்லை. ஆனால், ஆட்டோவில் பயணிக்க தொடங்கியபோதுதான் அந்த சம்பவம் நடந்திருக்கிறது. அதாவது, "உங்கள் பயணத்திற்காக ரூ.7.66 கோடியை செலுத்த வேண்டும்" என்று என பில் வந்திருக்கிறது.

புக் செய்யும் போது குறிப்பிட்டிருந்த இடத்தை கடந்து வேறு ஒரு இடத்தில் அவர் இறங்க திட்டமிட்டிருந்தார். இத்தனைக்கும் பயணம் முடியக்கூட இல்லை. அதற்குள் கட்டண தொகை பில்லாக வந்திருக்கிறது. அதெல்லாம் கூட பராவாயில்லை, ஆனால் ரூ.7.66 கோடி கட்டணமாக வந்ததுதான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று தீபக் கூறியுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை வீடியோவுடன் சோஷியல் மீடியா தளங்களில் பகிர்ந்திருந்த தீபக், சந்திரனுக்கு சென்றால் கூட இவ்வளவு செலவு ஆகாது என்று கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பேசியதாவது, "நான் வழக்கமாக ஊபர் ஆட்டோவை பயன்படுத்தி வருகிறேன். அதேபோலதான் நேற்றும் ஆட்டோவை புக் செய்தேன். புக் செய்யும்போது ரூ.62 என காட்டியது. ஆனால், பயணம் தொடங்கியவுடன் ரூ.7.66 கோடி என கட்டணமாக பில் வந்தது. சரியாக சொல்வதெனில் ரூ.7,66,83,762 என கட்டணம் வந்திருக்கிறது. நிலவுக்கே பயணிப்பத்தால் கூட இவ்வளவு செலவாகாது. ஒரே நைட்டில் பணக்காரராக ஊபர் திட்டம் போட்டிருக்கிறது போல" என்று கூறியிருந்தார்.

கட்டணம் குறித்த ஸ்கிரீன்ஷாட்டும், வீடியோவும் சோஷியல் மீடியாவையே கலக்கிக்கொண்டிருந்த நிலையில், ஊபர் இதற்கு பதிலளித்துள்ளது. அதில், "இந்த சிக்கலை நாங்கள் கவனத்தில் கொண்டுள்ளோம். விரைவில் இது சரி செய்யப்படும். ஆனால் சிறிது நேரம் ஆகும்" என்று தெரிவித்திருக்கிறது.

ஊபர் ஆட்டோவுக்கு ரூ.62 கட்டணத்திற்கு பதிலாக ரூ.7.66 கோடி பில் வந்துள்ள சம்பவம் பெரும் சோஷியல் மீடியாக்களில் பெரும் விவாதங்களை கிளப்பியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+