உச்சபட்ச பாதுகாப்பில் உதம்பூர்.. பாக். தாக்குதலை தொடர்ந்து ஹை அலர்ட் மோடில் பாதுகாப்புப் படை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜம்மு, பதான்கோட் மற்றும் உதம்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள ராணுவ தளங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் தரப்பில் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்த முயற்சிகள் நடைபெற்றது. இந்த தாக்குதலை இந்திய ராணுவம் சிறப்பாக முறியடித்ததோடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சைரன்கள் ஒலிக்கப்பட்டு, மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் உதம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உச்சக்கட்ட எச்சரிக்கையுடன் இருக்கின்றனர்.

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா தரப்பில் ஆபரேஷன் சிந்தூர் செயல்படுத்தப்பட்டது. இதன் மூலமாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் இருந்த ராணுவ முகாம்கள் அழிக்கப்பட்டன. இந்த நிலையில் ஆபரேஷன் சிந்தூர்-க்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவில் தாக்குதலை தொடங்கி இருக்கிறது.

Udhampur on High alert after Pakistan attack with Drones and Missiles in Jammu Punjab and other borders

வியாழக்கிழமை இரவு 9 மணியளவில் ஜம்மு, ஜெய்சல்மர், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களின் எல்லைப் பகுதிகளில் டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டன. இதனை இந்திய ராணுவம் எளிதாக முறியடித்தது. அதேபோல் ஜம்மு - காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலையும் இந்திய ராணுவம் தடுத்து முறியடித்தது.

இதன் காரணமாக உடனடியாக சைரன்கள் ஒலிக்கப்பட்டு, மக்கள் அனைவரும் வீடுகளில் இருக்க அறிவுறுத்தப்பட்டது. அதேபோல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிளாக் அவுட் செய்யப்பட்டன. மொத்தமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டது. சுமார் 35 நிமிடங்கள் வரை பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அதேபோல் ஜம்மு, பதான்கோட் மற்றும் உதம்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள ராணுவ தளங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்த முயற்சித்தது. இதனை எஸ்400 சுதர்சன் சக்ரா மூலமாக இந்திய ராணுவம் முறியடித்தது. இதனிடையே உரி பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.

இதன் காரணமாக ஜம்மு, உதம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உச்சக்கட்ட உஷார் நிலையில் இருக்கின்றன. ஏற்கனவே சைரன்கள் ஒலிக்கப்பட்டுள்ளதோடு, பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியா தற்போது பதிலடியை கொடுக்க தொடங்கி இருந்தாலும், இந்திய ராணுவம் எச்சரிக்கையாக இருந்து வருவதாக பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+