யுஜிசி நெட் தேர்வு உள்பட மூன்று தேர்வுகளுக்கு புதிய தேதி.. தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
டெல்லி: தேசிய பொது நுழைவுத்தேர்வு (ncet), சிஎஸ்ஐஆர் யுஜிசி நெட் மற்றும் யுஜிசி நெட் ஆகிய தேர்வுகள் தேதிகளை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அவற்றின் விவரங்களை பார்ப்போம்.
இந்தியாவில் நாடு தழுவியஅளவிலான தேர்வுகளைதேசிய தேர்வு முகமை தான் நடத்துகிறது. அண்மைக்காலங்களில் தேசிய தேர்வு முகமை கடுமையான சர்ச்சையில் சிக்கி உள்ளது. இது நீட் தேர்வில் ஆரம்பித்து,. நெட் தேர்வு வரை நீண்டுள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த மே மாதம் நடத்தப்பட்ட நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு, ஆள் மாறாட்டம், கருணை மதிப்பெண் மோசடி, உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகள் வெடித்தன. இந்த தேர்வு ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராடி வருகின்றன.இந்த விவகாரத்தில் நா'டாளுமன்றம் ஸ்பதம்பித்து வருகிறது. இது ஒரு புறம் எனில், உதவிப் பேராசிரியர் பணிக்கும், இளநிலை ஆராய்ச்சி உதவித்தொகை பெறுவதற்குமான தகுதியைத் தீர்மானிக்கும் 'நெட்' தேர்வு கடந்த 18-ம் தேதி நடந்தது. 9,08,580 பேர் எழுதிய இந்தத் தேர்விலும் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி, நெட் தேர்வையே மத்திய கல்வி அமைச்சகம் ரத்து செய்தது.
அதுட்டுமின்றி நீட், நெட் உள்பட தேசிய தேர்வு முகமை நடத்தும் போட்டித் தேர்வுகளை சீர்திருத்தவும், தேசிய தேர்வு முகமையின் கட்டமைப்பை வலுப்படுத்தவும் முன்னாள் இஸ்ரோ தலைவர் டாக்டர். கே.ராதாகிருஷ்ணன் தலைமையிலான 7 பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்தது.
தேர்வு நடைமுறையில் தேவைப்படும் சீர்திருத்தங்கள், தரவு பாதுகாப்பு நெறிமுறைகளை மேம்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், தேசிய தேர்வு முகமையின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்த பரிந்துரைகளை இந்த குழு வழங்கும் என்றும் 2 மாதங்களுக்குள் இது தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுதவிர தேசிய தேர்வு முகமையின் தலைவர் சுபோத்குமார் சிங்கையே அந்த பதவியில் இருந்து நீக்கி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி மத்திய கல்வி அமைச்சகம் நடவடிக்கை எடுத்தது. அவருக்கு பதிலாக இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பின் தலைவராக இருந்த பிரதீப் சிங் கரோலா, தேசிய தேர்வு முகமையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் நீட் தேர்வு முறைகேடுகள் சர்ச்சைகள் காரணமாக முதுகலை நீட் தேர்வின் நடைமுறையை சரிபார்க்கும் வகையில் தேர்வை ஒத்திவைக்க மத்திய சுகாதார அமைச்சகம் முடிவெடுத்தது. மாணவர்களில் நலனை கருதியும், தேர்வு நடைமுறையின் புனிதத்தை காக்கவும், ஜூன் 23 நடைபெறவிருந்த தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும், புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்தது அடுத்தடுத்து தேர்வுகளை மத்திய அரசு ஒத்திவைத்தது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சூழலில் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய மற்றும் மாநில பல்கலைக்கழகங்கள் அல்லது ஐஐடிகள், என்ஐடிகள், ஆர்ஐஇகள் மற்றும் அரசுக் கல்லூரிகள் உள்ளிட்ட நான்கு ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியர் கல்வித் திட்டத்தில் (ஐடிஇபி) சேருவதற்கான தேசிய பொது நுழைவுத் தேர்வு (என்சிஇடி) ஜூலை 10ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழுவின் தேசிய தகுதித் தேர்வு (UGC NET) இந்த ஆண்டு கணினி அடிப்படையிலான சோதனை (CBT) முறையில் நடத்தப்படும், இது முந்தைய பேனா மற்றும் காகித வடிவத்தில் இருந்து மாற்றப்பட்டுள்ளது. UGC NET தேர்வு ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 4, 2024 வரை நடைபெறும். மறுபுறம், CSIR NET தேர்வு ஜூலை 25-27க்குள் நடத்தப்பட உள்ளதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
இதற்கிடையில், அகில இந்திய ஆயுஷ் முதுகலைப் பட்டதாரி நுழைவுத் தேர்வு (AIAPGET) 2024 திட்டமிட்டபடி ஜூலை 6ஆம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமையும் உறுதி செய்துள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications