ஆதார் கார்டில் புதிய வசதி அறிமுகம்.. அது உங்க மொபைல் எண், இமெயில் ஐடி தானா.. 'உடனே சரிபாருங்க'!
டெல்லி: ஆதாரில் நீங்கள் இணைத்துள்ள மொபைல் எண் மற்றும் இமெயில் ஐடியை சரிபார்க்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ( UIDAI ) இப்போது அனுமதிக்கிறது
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆதார் அட்டை வழங்கி வருகிறது. அந்த ஆதார் அட்டை தான் இப்போது பல்வேறு அடிப்படை அரசு திட்டங்களுக்கு கட்டாயமாக உள்ளது. இந்நிலையில் பொதுமக்களின் வசதிக்காக ஆதாரில் பல்வேறு வசதிகளை புதிது புதிதாக அப்டேட் செய்து வருகிறது. ஆதாரில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம், மொபைல் எண் மாற்றம் என பல அடிப்படை விஷயங்கள் அப்டேட் செய்யப்பட்டிருக்கின்றன
இந்நிலையில் புதிததாக ஆதாரில் நீங்கள் இணைத்துள்ள மொபைல் எண் மற்றும் இமெயில் ஐடியை சரிபார்க்க இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ( UIDAI ) இப்போது அனுமதிக்கிறது.

பொதுவாக மக்கள் சில சந்தர்ப்பங்களில், தங்களுடைய மொபைல் எண்களில் எந்த ஆதார் இணைக்கப்பட்டுள்ளது என்பது பற்றி தெரியவில்லை என்றும் இந்த மொபைல் எண்ணா அல்லது அந்த மொபைல் எண்ணா என்று குழப்பத்தில் இருப்பதும் UIDAI இன் கவனத்திற்கு வந்தது.
இந்த குழப்பம் காரணமாக ஆதார் OTP வேறு ஏதேனும் மொபைல் எண்ணுக்குப் போய்விடுமோ என்று ஆதார் வைத்திக்கும் பலரும் கவலைப்பட்டனர்.
இந்த நிலையில் தான் மொபைல் எண் மற்றும் இமெயில் ஐடியை சரிபார்க்க சரிபார்க்கும் வசதியை இந்திய தனித்துவ அடையாள அணையம் அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதியின் மூலம், பொதுமக்கள் ஆதாரில் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண் எது, இமெயில் முகவரி என்பதை மிக எளிதாக சரிபார்க்க முடியும் என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த வசதியை அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (https://myaadhaar.uidai.gov.in/) அல்லது mAadhaar ஆப் மூலம் சரிபார்க்க மின்னஞ்சல்/மொபைல் எண்' அம்சத்தின் கீழ் பெறலாம். இதில் தான் நீங்கள் உங்க்ள் சொந்த மின்னஞ்சல் அல்லது மொபைல் எண் அந்தந்த ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்க முடியும்.
இந்த வசதியின் காரணமாக மின்னஞ்சல் அல்லது மொபைல் எண் குறிப்பிட்ட ஆதார் எண்ணுடன் மட்டும் தான் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளவு முடியும்.
ஒருவேளை குறிப்பிட்ட மொபைல் எண் இணைக்கப்படாவிட்டால் அதை உங்களுக்கு இணையதளத்திலேயே தெரிவித்துவிடும். அத்துடன் நீங்கள் விரும்பினால், மொபைல் எண்ணைப் புதுப்பிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்கலாம் என்றும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவுறுத்திவிடும்.

அதாவது உங்கள் மொபைல் எண் ஏற்கனவே சரிபார்க்கப்பட்டிருந்தால், நீங்கள் டைப் செய்த மொபைல் எண் ஏற்கனவே எங்கள் பதிவுகளுடன் சரிபார்க்கப்பட்டது' போன்ற மெசேஜ் உங்களுக்கு திரையில் காட்டும்.
ஆனால் ஒருவேளை உங்கள் மொபைல் எண் உங்களுக்கு சரியாக நினைவில் இல்லை என்றால், நீங்கள் ஆதார் அட்டைக்கு முதல் முதலில் பதிவு செய்யும் போது கொடுத்த மொபைலின் கடைசி மூன்று இலக்கங்களை உங்கள் ஆதார் போர்டல் அல்லது mAadhaar செயலியில் சரிபார்க்கும் அம்சத்தில் அறிந்து கொள்ளலாம்.
எனினும் உங்கள் ஆதாரில் வேறு மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் முகவரி இருந்தாலே அல்லது தவறாக இருந்தாலோ அதை நீங்கள் மாற்றிக்கொள்ளலாம். அதற்கு நீங்கள் அருகில் உளிள ஆதார் மையத்திற்கு செல்ல வேண்டும். அங்கு அவர்கள் உங்கள் மொபைல எண் மற்றும் இமெயில் முகவரியில் உள்ள பிழைகளை சரி செய்து மாற்றித்தருவார்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications