உஜ்வாலா திட்ட கேஸ் சிலிண்டருக்கு மானியம் ரூ. 400 ஆக உயர்வு: மத்திய அரசு ஜாக்பாட்
டெல்லி: உஜ்வாலா திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 12 சிலிண்டர்களுக்கு மானியமாக ரூ.200 அளிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது மேலும் ரூ. 200 கூடுதலாக வழங்கப்பட உள்ளது.
வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தும் 14 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை மத்திய அரசு இன்று அதிரடியாக குறைத்தது. அதாவது சிலிண்டரின் விலையை ரூ. 200 குறைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. இதன்படி சென்னையில் தற்போது ரூ.1,118 ஆக உள்ள சிலிண்டர் விலை இனி ரூ.918 க்கு விற்பனை செய்யப்படும். அதேபோல், உஜ்வாலா திட்டத்தின் கீழ் கூடுதலாக 200 மானியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.400 மானியம் வழங்கப்படும். மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் இந்த தகவலை தெரிவித்தார். மேலும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 75 லட்சம் புதிய இலவச இணைப்புகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். உஜ்வாலா திட்டத்தின் கீழ் கேஸ் அடுப்பு மற்றும் முதல் எரிவாயு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications