இந்தியர்கள் முதுகில் குத்தும் புதின்? ரஷ்யா ஆபரை நம்பாதீங்க! வெளியுறவுத்துறை தந்த வார்னிங்- பின்னணி
டெல்லி: ரஷ்யா தரும் சலுகைகளை நம்பி ஏமாற வேண்டாம். ரஷ்ய ராணுவத்தில் சேருவதற்கான சலுகைகளில் இருந்து இந்தியர்கள் விலகியே இருக்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை சார்பில் இளைஞர்களுக்கு முக்கிய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதன் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
நம் நாடும், ரஷ்யாவும் நெருங்கிய நட்பு நாடுகளாக உள்ளன. இந்நிலையில் தான் தான் ரஷ்யாவின் சலுகைகளை நம்பி இளைஞர்கள் யாரும் ஏமாற வேண்டாம். அந்த நாட்டின் ராணுவத்தில் சேர வேண்டாம் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளது.

இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ரஷ்ய ராணுவத்தின் இந்தியர்கள் சேர்க்கப்படுவது பற்றி ஊடகங்கள் சார்பில் கேள்வி கேட்கப்படுகிறது. அதற்கு செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியுள்ளதாவது:
ரஷ்ய ராணுவத்தில் சமீபத்தில் இந்தியர்கள் சேர்க்கப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ரஷ்ய ராணுவத்தில் சேர்வதா் ஏற்படும் ஆபத்துகளை கடந்த ரு ஆண்டாக அரசாங்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் மத்திய அரசு அடிக்கோடிட்டு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த விஷயம் பற்றி மத்திய அரசு, ரஷ்ய அதிகாரிகளிடம் எடுத்து கூறி உள்ளது. இந்த நடைமுறையை முடிவுக்கு கொண்டு வந்து இந்தியர்களை விடுவிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டுள்ளோம்.
இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். ரஷ்ய ராணுவத்தில் சேருவதற்கான எந்தவொரு சலுகைகளையும் யாரும் பெற வேண்டாம். அதில் இருந்து விலகியே இருக்க வேண்டும் என்று நாங்கள் மீண்டும் ஒருமுறை வலியுறுத்துகிறோம். ஏனென்றால் இத்தகைய செயலில் ஆபத்து நிறைந்துள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications