டெல்லி கலவர வழக்கு.. ஜாமீன் கோரி மாணவர் செயற்பாட்டாளர் உமர் காலித் உச்சநீதிமன்றத்தில் முறையீடு
டெல்லி: கடந்த 2020ம் ஆண்டு டெல்லியில் நடந்த கலவரத்திற்கு மூளையாக செயல்பட்டதாக கூறி உபா சட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவர் செயற்பாட்டாளரான உமர் கலித் உட்பட 9 பேருக்கு தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜாமீன் கோரி உமர் காலித் உள்ளிட்டோர் உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளனர்.
கடந்த 2019ம் ஆண்டு குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய பாஜக அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.

குறிப்பாக டெல்லி ஜேஎன்யு பல்கலைக்கழகம் மாணவர்களின் போராட்ட மையமாக மாறியது. போராட்டத்தை முன்னெடுத்தவர்களாக ஜேஎன்யு மாணவர் தலைவர் உமர் காலித் உள்ளிட்டோர் இருந்தனர். போராட்டம் ஒரு பக்கம் தீவிரமடைந்துக்கொண்டிருக்க, மறுபுறம் அதை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணறி வந்தனர். இப்படி இருக்கையில் 2020 பிப். 24ம் தேதி போராட்டக்காரர்களுக்கும் வலதுசாரி கும்பலுக்கும் இடையே வன்முறை வெடித்தது. இது டெல்லி முழுவதும் எதிரொலித்தது.
கலவரத்தில் மொத்தம் 53 பேர் கொல்லப்பட்டனர். 700க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். டிரம்ப் இந்தியா வரும் நேரம் பார்த்து கலவரம் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும், டெல்லி போலீஸ் குற்றம்சாட்டியது. குற்றச்சாட்டின் அடிப்படையில் பலரும் கைது செய்யப்பட்டனர். குறிப்பாக மாணவர்கள், செயற்பாட்டாளர்கள் என 18 பேரை உபா சட்டத்தின் கீழ் செய்துதது. இதில் உமர் காலித் உட்பட 9 பேர் எந்த விசாரணையும் நடத்தப்படாமல் ஜாமீன் வழங்காமல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர்.
கைது என்றால், என்ன குற்றம்? குற்றத்திற்கான ஆதாரம், புலன் விசாரணை நடத்தப்பட வேண்டும். ஆனால் இந்த 9 பேர் வழக்கில் அப்படி எதுவும் நடக்கவில்லை.
எனவே 9 பேரும் விசாரணை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம், விசாரணையை ஒத்தி வைத்தது. இதனையடுத்து டெல்லி உயர்நீதிமன்றத்திலும் ஜாமீன் கோரி விண்ணப்பித்திருந்தனர். வழக்கு விசாரணையில், "9 பேர் மீதும் இன்னும் விசாரணை தொடங்கப்படவில்லை. 5 ஆண்டுகளாக சிறையில் இருக்கிறார்கள். எனவே சமத்துவத்தின் அடிப்படையில் அவர்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்" என்று 9 பேர் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
அரசு தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, "இந்த கலவரம் நன்கு திட்டமிட்டது. டிரம்ப் இந்தியா வரும் நேரம் பார்த்து கலவரம் நடத்தப்பட்டிருக்கிறது. சர்வதேச அரங்கில் இந்தியாவுக்கு தலைகுனிவை ஏற்படுத்தவே இந்த கலவரம் நடத்தப்பட்டிருக்கிறது" என்று குற்றம்சாட்டினார்.
இதனையடுத்து இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி செப்.2ம் தேதிக்கு தீர்ப்பை ஒத்தி வைத்தனர். தீர்ப்பில், "உமர் காலித் ஒரு பொது உரையில் "இன்குலாபி சலாம்", "கிராந்திகாரி இஸ்திக்பால்" (புரட்சிகர வாழ்த்துகள்) என்ற சொற்களை பயன்படுத்தியது குற்றமாகும். மறைமுகமாக வன்முறைக்கு அழைப்பு விடுப்பதை போல இருக்கிறது" என்று கூறி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார்.
இதனையடுத்து, டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இன்று உச்சநீதிமன்றத்தில் உமர் காலித் உட்பட 9 பேரும் மேல்முறையீடு செய்திருக்கின்றனர். இந்த வழக்கு எப்போது விசாரணைக்கு வரும் என்பது விரைவில் தெரியவரும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications