Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

டெல்லி கலவர வழக்கு.. ஜேஎன்யு முன்னாள் தலைவர் உமர் காலித்துக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி கலவர சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஜேஎன்யூ மாணவர் உமர் காலித்திற்கு, பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது. சகோதரி திருமணத்தில் கலந்துகொள்வதற்காக, டிசம்பர் 16 முதல் 29 வரை அவருக்கு நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டிருக்கிறது.

கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த வகுப்புவாத வன்முறை சதி வழக்கில், UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட காலித், குடும்ப காரணங்களுக்காக தற்காலிக ஜாமீன் கோரியிருந்தார்.

Umar Khalid Delhi Riots

அவரது கோரிக்கை நோக்கம், குறுகிய கால அளவைக் கருதி கூடுதல் அமர்வு நீதிபதி சமீர் பாஜ்பாய் ஜாமீன் வழங்கியுள்ளார். இந்த வழக்கில் காலித் தரப்பில் மூத்த வழக்கறிஞர் திரிதீப் பைஸ், வழக்கறிஞர் சன்யா குமார் ஆகியோரும், டெல்லி போலீஸ் தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர்கள் அமித் பிரசாத், மதுகர் பாண்டே, அனிருத் மிஷ்ரா ஆகியோருடன் வழக்கறிஞர்கள் அயோத்தியா பிரசாத், ஹர்ஷில் ஜெயின் ஆகியோரும் ஆஜராகியிருந்தனர்.

நீதிமன்றம் வெளியிட்டுள்ள உத்தரவில், "விண்ணப்பதாரரின் ரத்த சொந்த சகோதரியின் திருமணம் என்பதைக் கருத்தில் கொண்டு, ஜாமீன் வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரருக்கு டிசம்பர் 16, 2025 முதல் டிசம்பர் 29, 2025 வரை ஜாமீன் வழங்கப்படுகிறது. ரூ.20,000 தனிநபர் பிணைப்பத்திரம் மற்றும் அதே தொகைக்கு இரண்டு உறுதிப் பத்திரங்களுடன் இடைக்கால ஜாமீன் வழங்கப்படுகிறது. இதற்குக் கீழ்க்காணும் நிபந்தனைகள் பொருந்தும்.

உமர் காலித் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தக்கூடாது. தனது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களை மட்டுமே சந்திக்க வேண்டும். மேலும், திருமண விழாக்கள் நடைபெறும் இடங்கள் அல்லது தனது வீட்டில் மட்டுமே அவர் இருக்க வேண்டும் என நிபந்தணைகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

காலித் மற்றும் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மேலும் ஐந்து பேர் தாக்கல் செய்த வழக்கமான ஜாமீன் மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் டிசம்பர் 10 அன்று ஒத்திவைத்திருந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+