நபிகள் நாயகத்தை அவமதித்துவிட்டனர்.. கத்தார், சவுதியோடு டீம் போட்ட ஐநா.. இந்தியா பற்றி பரபர கமெண்ட்!
டெல்லி: இந்தியாவில் இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு கருத்துக்கள் அதிகரித்து வருவதாக இஸ்லாமிய நாடுகள் பல விமர்சனம் செய்துள்ள நிலையில், ஐநாவும் இதில் கருத்து தெரிவித்துள்ளது. ஐநா செய்தி தொடர்பாளர் இது தொடர்பாக முக்கியமான விமர்சனம் ஒன்றை வைத்துள்ளார்.
பாஜக செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா இஸ்லாமிய இறை தூதுவர் நபிகள் நாயகம் குறித்து பேசிய கருத்துக்கள் உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ளது. சமீபத்தில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நுபுர் சர்மா, நபிகள் நாயகத்தை கடுமையாக இகழ்ந்து இருந்தார்.
நபிகள் குறித்து சில தவறான கருத்துக்களை அவர் தெரிவித்து இருந்தார்.

சர்ச்சை
இவரின் கருத்துக்கள் சர்ச்சையான நிலையில் மகாராஷ்டிராவில் இவருக்கு எதிராக வழக்கு பதியப்பட்டது. அதேபோல் உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் இவருக்கு எதிராக கடுமையான போராட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த போராட்டங்கள் பின்னர் கலவரத்தில் முடிந்தது. இந்த கலவரத்தில் ஈடுபட்ட 1500 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. இந்த நிலையில் நுபுர் சர்மா கருத்து தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறையிடம் கத்தார் உள்ளிட்ட நாடுகள் விளக்கம் கேட்டன.
Recommended Video

விளக்கம்
இவரின் பேச்சை கத்தார் கடுமையாக விமர்சனம் செய்தது. கத்தார் சார்பாக இந்தியாவிற்கு சம்மனும் அனுப்பப்பட்டது.. இதையடுத்து நுபுர் சர்மா பாஜகவில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் இந்த விவகாரத்தை கத்தார், ஈரான் உள்ளிட்ட நாடுகள் விடவில்லை. இந்தியா இதற்கு பொது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கத்தார் கூறியது. இதையடுத்து இந்தியா சார்பிலும், அது அரசின் அதிகாரபூர்வ கருத்து கிடையாது என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

ஐநா
இந்த நிலையில் ஐநா தற்போது இதில் கருத்து தெரிவித்துள்ளது. செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த செய்தியாளர், இந்தியாவில் நுபுர் சர்மா நபிகள் நாயகத்திற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். இதை உலக நாடுகள் விமர்சனம் செய்து வருகின்றன. அரபு நாடுகள் பல விமர்சனம் செய்து வருகின்றன. இது தொடர்பாக இந்தியாவிற்கும் சம்மன் அனுப்பப்பட்டு இருக்கிறது. இதில் ஐநாவின் நிலைப்பாடு என்ன? என்று கேள்வி எழுப்பினார்.

என்ன சொன்னார்?
இதற்கு பதில் அளித்த ஐநா பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டேரசின் செய்தி தொடர்பாளர் ஸ்டிபன் எல்லா மதத்திற்கும் மரியாதை, சகிப்புத்தன்மை எல்லா நாட்டிலும் கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம். நான் இது தொடர்பான செய்திகளை படித்தேன். ஆனால் நேரடியாக அவர் என்ன சொன்னார் என்று நான் கேட்கவில்லை. ஆனால் அதை எல்லாம் தாண்டி உலகம் முழுக்க எல்லா நாட்டிலும் எல்லா மதத்திற்கும் மரியாதை தரப்பட வேண்டும் என்பதே எங்கள் கருத்து என்று ஸ்டிபன் தெரிவித்துள்ளார்.
-
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு












Click it and Unblock the Notifications