CJP போராட்டத்தை மிக மோசமாக கையாளும் அரசு.. கைது குறித்து ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு கவலை!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: டெல்லி போராட்டத்தில் மூத்த அரசியல் தலைவர்கள், ஆர்ப்பாட்டக்காரர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் கைது செய்யப்பட்டதற்கு ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியில் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தன்னிச்சையாக செயல்பட்டு சில முடிவுகளை எடுத்துள்ளதாக பல்வேறு கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன. மேலும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

UN Human Rights Body Raises Concern Over mass detentions in Delhi

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் இன்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். போராட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி போராட்டம் நடைபெற்றது.

டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி சார்பில் இன்று நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற 3 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜித் தீப்கே மற்றும் முக்கிய நிர்வாகிகள் போராட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பே போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல், சிஜேபி போராட்டத்திற்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் கேரள முன்னாள் முதலமைச்சருமான பினராயி விஜயன் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் போலீசாரால் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டனர்.

மேலும், போராட்டத்தில் மக்கள் பங்கேற்பதைத் தடுப்பதற்காக சுமார் 7,000 பேர் தடுத்து வைக்கப்பட்டனர். தடுத்து வைக்கப்பட்ட போராட்டக்காரர்களுக்கு தண்ணீர் மறுக்கப்பட்டதாகவும், அவர்கள் வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து வெகு தொலைவில் விடுவிக்கப்பட்டதாகவும், பலரிடம் அத்துமீறி நடந்துகொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தடுத்து வைக்கப்பட்டவர்களில் இந்திய மாநிலங்களின் நான்கு முன்னாள் முதலமைச்சகள், மாணவர்கள், இளைஞர் அமைப்புகளின் தலைவர்கள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் முதியவர்கள் ஆகியோர் அடங்குவர். இந்நிலையில் அமைதியான முறையில் ஒன்று கூடுவதற்கான உரிமை மதிக்கப்படுவதை உறுதி செய்யுமாறு, இந்தியாவிடம் ஐ.நா. மனித உரிமைகள் பிரிவு செய்தித் தொடர்பாளர் தமீன் அல்-கீதன் வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "டெல்லியில் இன்று நடைபெற்ற பெரிய அளவிலான போராட்டங்களுக்கு முன்னதாகவும், அப்போராட்டங்களின் போதும், போராட்டக்காரர்கள், போராட்டத் தலைவர்கள், சிவில் சமூக அமைப்புகளின் உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் இந்தியாவில் பெருமளவில் தடுத்து வைக்கப்பட்டதாக வரும் தகவல்கள் குறித்து நாங்கள் கவலை கொள்கிறோம்.

அமைதியான முறையில் ஒன்றுகூடுவதற்கான உரிமை முழுமையாக மதிக்கப்படுவதையும், நிறைவேற்றப்படுவதையும் உறுதி செய்யுமாறு அதிகாரிகளை நாங்கள் வலியுறுத்துகிறோம். அமைதியான போராட்டங்கள் மீதான கட்டுப்பாடுகள், அவசியம் மற்றும் விகிதாச்சாரம் குறித்த கடுமையான அளவுகோல்களைப் பூர்த்தி செய்ய வேண்டும்.

நாட்டின் ஜனநாயக மரபுகள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான கடமைகளுக்கு இணங்க, அமைதியான போராட்டக்காரர்களுக்கு எதிராகச் செயல்படும்போது சட்ட அமலாக்க படைகள் மிகுந்த கட்டுப்பாட்டை கடைப்பிடிப்பதை இந்திய அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். தன்னிச்சையாகத் தடுத்து வைக்கப்பட்ட அனைவரும் உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுவிக்கப்பட வேண்டும்.
மேலும், பரவலாக எழுப்பப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையில் ஈடுபடுமாறும் அதிகாரிகளை நாங்கள் வலியுறுத்துகிறோம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+