டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா வைரஸ் தொற்றால் 60 வயதிற்குட்பட்டவர்கள் மரணம் அடைவது இந்தியாவில் அதிகரிப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கோவிட் -19 தொற்றால் ஒட்டுமொத்த உயிரிழந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். அதே சமயம் 60-75 வயதுக்குட்பட்டவர்கள் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் ஆக உள்ளனர். அவர்களின் இறப்பு விகிதம் 42% ஆக உள்ளது. சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்ட அண்மை தகவலில் இது தெரியவந்துள்ளது.

இதற்கிடையே ஆபத்து குறைவு என்றாலும், 45 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் 34 சதவீதம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

நீரிழிவு, இதய கோளாறுகள் மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய்கள் போன்ற நோயுற்றவர்களிடையே இறப்பு விகிதம் இன்னும் அதிகமாக இருந்தது. அத்துடன் இத்தகைய நிலைமைகளைக் கொண்ட நோயாளிகள்தான் மொத்த கோவிட் 19 இறப்புகளில் 78% ஆக உள்ளனர்.

உலகளவில் கொரோனாவால் மொத்தம் 2,30,000 பேர் மரணம்.. அமெரிக்கா, இங்கிலாந்தில் நிலைமை மோசம் உலகளவில் கொரோனாவால் மொத்தம் 2,30,000 பேர் மரணம்.. அமெரிக்கா, இங்கிலாந்தில் நிலைமை மோசம்

14 நாட்கள் ஒப்பீடு

14 நாட்கள் ஒப்பீடு

அதேநேரம் சில நம்பிக்கை அளிக்கும் தகவல்களும் சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்களில் இருந்தது. இதன்படி பதினைந்து நாட்களுக்கு முன்பு இருந்ததை விட இப்போது அதிகமான நோயாளிகள் கொரோனா தொற்று நோயால் குணப்படுத்தப்பட்டுள்ளார்கள். கடந்த 14 நாட்களுக்கு முன்பு 13.06% சதவவீதம் கோவிட் -19 நோயாளிகள் குணப்படுத்தப்பட்ட நிலையல், வியாழக்கிழமை நிலவரப்படி 25.19% ஆக உயர்ந்துள்ளது. இது குணம்படுத்தும் விசயத்தில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

ஆண்களே அதிகம்

ஆண்களே அதிகம்

இதுவரை, கொரோனா என்ற கோவிட் 19 தொற்றால் 1,075 பேர் இறந்துள்ளனர், 8,372 பேர் குணமாகியுள்ளனர் என்ற மத்திய சுகாதார அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது. மொத்த இறப்பு விகிதம் 3.2% ஆகும். உயிரிழந்தவர்களில் 65% பேர் ஆண்கள் மற்றும் 35% பெண்கள் ஆவார். வியாழக்கிழமை நிலவரப்படி சுகாதார அமைச்சம் வெளியிட்ட செய்தியில் 33,610 பேர் கோவிட் -19 நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவற்றில் 24,162 நோயாளிகள் வியாழக்கிழமை மாலை 5 மணி வரை சிகிச்சையில் இருந்தனர்.

முதியவர்கள் எத்தனை

முதியவர்கள் எத்தனை

உயிரிழந்தவர்களில் கணிசமான நோயாளிகள் 45-60 வயதுக்குட்பட்டவர்களாக இருந்தபோதிலும், 45 வயதிற்கும் குறைவானவர்கள் இறந்து போவது இந்தியாவில் 14% சதவீதம் என்ற அளவில் உள்ளது. அதேநேரம் மொத்த இறப்புகளில் 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் 9.2% ஆக உள்ளனர். கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் வயது விவரங்களை அண்மைக்காலத்தில் அரசாங்கம் பகிர்ந்து கொள்ளவில்லை என்றாலும், ஏப்ரல் 6 ஆம் தேதி வெளியிடப்பட்ட தகவல்களின்படி , 21-40 வயதிற்குட்பட்டவர்களிடையே கிட்டத்தட்ட 42% கேஸ்கள் பதிவாகி இருந்தது, மேலும் 41-60 வயதுடையவர்களிடையே 32.82% கேஸ்கள் பதிவாகி இருந்தது..

அதிகமான இறப்பு

அதிகமான இறப்பு

இளையவர்களின் இறப்பு விகிதம் மிகக்குறைவாக இருப்பதுடன் நோய்த்தொற்று குணமாகுவதும் வேகமாக இருப்பதை இந்த புள்ளி விவரங்கள் குறிக்கிறது, அதேசமயம் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 60 வயதை நெருங்கியவர்கள் அதிகம் பேர் தொற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இறப்பும் அதிகமாக உள்ளது.

Recommended Video

    உலகத்தை உலுக்கிய கொள்ளை நோய்கள்... இனியாவது மாறுவோமா?
    நோய் எதிர்ப்பு சக்தி

    நோய் எதிர்ப்பு சக்தி

    நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், ஏற்கனவே உடல் நிலை பாதிக்கப்பட்ட முதியவர்கள் பொதுவாக அனைத்து காய்ச்சல்களாலும் பாதிக்கப்படுவார்கள் என்றும், அவர்களை கொரோனா வைரஸ் எளிதில் தாக்கும் என்றும் எனவே அவர்கள் அதிக கவனமாக இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இருப்பினும், இளைஞர்கள் சமூக இடைவெளியை பற்றி கவலைப்பட வேண்டியது அவசியம், ஏனெனில் லாக்டவுன் நீக்கப்பட்டவுடன் தான் வேலைக்கு செல்ல முடியும். தொற்றுநோயைத் தவிர்ப்பதற்கு மக்கள் குடும்பத்துடன் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது, குறிப்பாக வயதானவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியேறாமல் கவனத்துடன் இருக்க அறிவுறுத்தியுள்ளது.

    English summary
    under-60 age group in India’s Covid deaths rises. those between 45 and 60 years accounted for 34% deaths due to the disease.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X