பொது சிவில் சட்டம்.. இப்போ என்ன அவசரம்.. நிலைக்குழு கூட்டத்தில் வரிந்து கட்டிய எதிர்க்கட்சிகள்!
டெல்லி: இன்று நடந்த நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டத்தில் பொது சிவில் சட்டம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது எதிர்க்கட்சிகள் பொது சிவில் சட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. பொது சிவில் சட்டத்தில் அவசரம் ஏன்? என திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பியிருக்கின்றன.
இந்தியா பல்வேறு மதங்கள், இனங்கள், மொழிகள் கொண்ட பன்முகத்தன்மை கொண்ட ஒரு நாடாகும். இந்தியாவில் கிரிமினல் சட்டங்களை பொறுத்தவரை நாடு முழுவதும் ஒரே மாதிரியாக உள்ளன. ஆனால், சிவில் விவகாரங்களில் ஒரே மாதிரியான சட்டம் இல்லை. சிவில் சட்டங்கள் என்பது மதங்களைப் பொறுத்து மாறுகிறது. இத்தகைய சூழலை மாற்றி நாடு முழுக்க ஒரே பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்பது பாஜகவின் எண்ணமாகும்.

2024 ஆம் ஆண்டு தேர்தல் நெருங்கும் இந்த சூழலில் நாட்டில் பொது சிவில் சட்ட விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது. பிரதமர் மோடியே அண்மையில் மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாக பேசினார். இரண்டு வகையான சட்டங்களை கொண்டு நாட்டை நடத்த முடியாது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி அனைவரும் சமம் என்றும் பேசினார்.
பொது சிவில் சட்டத்தை அப்பட்டமாக ஆதரித்து பேசிய பிரதமர் மோடிக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்தன. மத்தியில் ஆளும் பாஜக இந்த விவகாரத்தை தற்போது கையில் எடுத்து இருப்பதால் தற்போது பொது சிவில் சட்டம் குறித்த விவாதம் அதிகரித்துள்ளது. வரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரிலேயே பொது சிவில் சட்டம் தொடர்பான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்ய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில், நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டம் இன்று கூடியது. இந்தக் கூட்டத்தில் பொது சிவில் சட்டம் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது எதிர்க்கட்சிகள் பொது சிவில் சட்டத்திற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. தேர்தலுக்கு 300 நாட்களே இருக்கும் நிலையில் பொது சிவில் சட்டத்தில் அவசரம் ஏன்? என திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கேள்வி எழுப்பியிருக்கின்றன.மேலும் தற்போதைய நிலையில், பொது சிவில் சட்டம் தொடர்பாக விவாதமே தேவையில்லை எனவும் பொதுசிவில் சட்ட விவகாரத்தில் பல்வேறு விளக்கங்கள் தேவைப்படுகின்றன என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன.
பொது சிவில் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் மாநிலங்களவை எம்.பி வில்சன் எழுதிய கடிதத்தில், 2024- பொதுத்தேர்தலை மனதில் கொண்டு பொது சிவில் சட்டத்தை மத்திய பாஜக அரசு அணுகுவதை ஏற்க முடியாது. பொது சிவில் சட்டம் தொடர்பான விவாதம், கருத்து கேட்பு போன்றவற்றை நிறுத்தக் கோரி சட்டத்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவருக்கு திமுக மாநிலங்களவை எம்.பி வில்சன் கடிதம் எழுதியுள்ளார்.
பொது சிவில் சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் எதிர்க்கட்சிகள் முகாமில் இருக்கும் சில கட்சிகள் அதற்கு ஆதரவான நிலைபாட்டை எடுப்பதை சூசகமாக கூறிவருவதையும் பார்க்க முடிகிறது. குறிப்பாக ஆம் ஆத்மி, உத்தவ் தாக்கரேவின் சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் பொது சிவில் சட்டத்தை ஆதரிப்பதாக கூறியுள்ளன.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications