Union Budget: தமிழ்நாட்டுக்கு உரிய பங்கீடு இல்லை.. மக்களுக்கு ஏமாற்றம் மட்டுமே! மத்திய பட்ஜெட்டை சாடிய தங்கம் தென்னரசு
சென்னை: 2025 - 2026 ஒன்றிய பட்ஜெட் தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. மாநிலத்தின் அடிப்படை வளர்ச்சிக்கான தேவைகள், வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், தொழில்துறை முதலீடு போன்ற முக்கிய துறைகளுக்கு எந்தத் தெளிவான அறிவிப்புகளும் இடம்பெறவில்லை என தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 9-வது முறையாக மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். காலை 11 மணியளவில் தனது பட்ஜெட் உரையை ஆரம்பித்த நிர்மலா சீதாராமன் 12.30 மணிக்கு பட்ஜெட் உரையை முடித்தார். பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.

அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம்
இந்த பட்ஜெட்டில் மொத்தமாக ரூ.53.5 லட்சம் கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அரசின் மொத்த வருவாய் ரூ.44.04 லட்சம் கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, மத்திய அரசின் பட்ஜெட் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:-
2026 ஒன்றிய பட்ஜெட் தமிழ்நாட்டு மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. மாநிலத்தின் அடிப்படை வளர்ச்சிக்கான தேவைகள், வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம், தொழில்துறை முதலீடு போன்ற முக்கிய துறைகளுக்கு எந்தத் தெளிவான அறிவிப்புகளும் இடம்பெறவில்லை.
ஏமாற்றம் மட்டுமே கிடைத்துள்ளது
பல ஆண்டுகளாக தமிழ் மக்கள் முன்வைக்கும் நியாயமான கோரிக்கைகள் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இந்திய நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் தமிழ்நாட்டிற்கு உரிய பங்கீடு வழங்கப்படவில்லை. இது தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளை முற்றிலும் புறக்கணித்த பட்ஜெட்டாகவே உள்ளது. மாற்றத்தை நோக்கியிருந்த மக்களுக்கு கிடைத்திருப்பது ஏமாற்றம் மட்டுமே.. என்று கூறியுள்ளார்.
மத்திய பட்ஜெட்டில் துறை ரீதியாக நிதி ஒதுக்கீடு:
* போக்குவரத்து - ரூ.5,98,520 கோடி
* பாதுகாப்பு - ரூ.5,94,585 கோடி
* கிராமப்புற வளர்ச்சி - ரூ.2,73,108 கோடி
* உள்துறை - ரூ.2,55,234 கோடி
* வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய செயல்பாடுகள் - ரூ.1,62,671 கோடி
* கல்வி - ரூ.1,39,289 கோடி
* எரிசக்தி - ரூ.1,09,029 கோடி
* சுகாதாரம் - ரூ.1,04,599 கோடி
* நகர்ப்புற வளர்ச்சி - ரூ.85,522 கோடி
* தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு - ரூ.74,560 கோடி
* வர்த்தகம் மற்றும் தொழில் - ரூ.70,296 கோடி
* சமூக நலன் - ரூ.62,362 கோடி
* அறிவியல் துறைகள் - ரூ.55,756 கோடி
* வரி நிர்வாகம் - ரூ.45,500 கோடி
* வெளியுறவு - ரூ.22,119 கோடி
* நிதி - ரூ.20,649 கோடி
* வடகிழக்கு பிராந்திய வளர்ச்சி - ரூ.6,812 கோடி
நிர்மலா சீதாராமன் உரை
முன்னதாக பட்ஜெட் உரையின் போது பேசிய நிர்மலா சீதாராமன், புனிதமான தைப்பூச நாளிலும், ரவி தாஸ் ஜெயந்தி நாளிலும் இந்த பட்ஜெட்டை நான் தாக்கல் செய்கிறேன். தடைகளைத் தாண்டி சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்பதில் பிரதமர் மோடி உறுதியாக இருந்தார். அதன் பலனாக கடந்த காலங்களில் நாட்டின் வளர்ச்சிக்காகவும் நிதி மேம்பாட்டிற்காகவும் தொடர்ச்சியாக உழைத்து வந்தோம்.
தன்னிறைவு பெற்ற இந்தியா என்ற இலக்கை நோக்கி வேகமாக முன்னேறி வருகிறோம். வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற பயணத்தில் தொடர்ந்து முன்னேற்றம் காணப்படும். இதற்கான தைரியமான நடவடிக்கைகளை தொடர்ந்து மத்திய அரசு எடுக்கும்" என்று கூறினார்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications