பட்ஜெட் 2025: எக்குத்தப்பாய் எகிறும் எதிர்பார்ப்பு! ஏஐ கல்வியை ஊக்குவிக்க 500 கோடியில் மையம்!
டெல்லி: 2025-2026 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். இந்த பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் தரப்பட்டிருப்பது தெரிகிறது. குறிப்பாக ஐந்து ஆண்டுகளில் 50 ஆயிரம் அடல் ஆய்வகங்கள் அரசு பள்ளியில் உருவாக்கப்படும், ஐந்து தேசிய திறன் மையங்கள் அமைக்கப்படும் என அறிவித்திருக்கிறார். குறிப்பாக உலக அளவில் செயற்கை நுண்ணுறிவு துறையில் போட்டியை சமாளிக்கும் வகையில் 500 கோடி ரூபாய் செலவில் புதிய மையம் அமைக்கப்படும் என பட்ஜெட் துறையில் நிர்மலா சீதாராமன் அறிவித்திருக்கிறார்.
மத்திய அரசின் 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான இன்று காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து 8வது முறையாக பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கிறார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கிய போது எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இருந்தபோதும் அதனை பொருட்படுத்தாமல் பட்ஜெட்டை வாசித்தார் நிர்மலா சீதாராமன்.
தொடர்ந்து எதிர்க்கட்சிகள் பட்ஜெட் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இருந்த போதும், பட்ஜெட் உரையை தொடர்ந்து வாசித்த நிர்மலா சீதாராமன்," உலக அளவில் வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியாவை உருவாக்கும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அனைவருக்குமான வளர்ச்சி என்ற இலக்கை நோக்கி இந்த அரசு பயணித்து வருகிறது என்றார்.
தொடர்ந்து," வேளாண் உற்பத்தி, போக்குவரத்து, கல்வி, விவசாயம் அறிவிப்புகள் வெளியிடப்பட இருக்கிறது. பருப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கும் வகையில் சிறப்பான சாகுபடி தரும் விதைகள் வழங்கும் திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தப்படும், அசாமில் யூரியா உற்பத்தி தொழிற்சாலை, பருத்தி உற்பத்தி அதிகரிக்க திட்டங்கள், பீகாரில் தாமரை விதை உற்பத்தி கூடம், எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் தன்னிறைவு பெற ஆறு ஆண்டுகால சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
மேலும் பீகாரில் உணவு பதப்படுத்துதல் மையம், காலனி மற்றும் தோல் துறையை பொறுத்தவரையில் சிறப்பு திட்டம்., பொம்மை உற்பத்தி துறையில் சர்வதேச மையமாக்கும் வகையில் சிறப்பு திட்டம், 2028 வரை ஜல்ஜீவன் திட்டம் நீட்டிக்கப்படும், 10 ஆண்டுகளில் இந்தியாவில் உள்ள மாநிலங்களில் புதிதாக 100 விமான நிலையங்கள் அமைக்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு இருக்கிறார்.
இந்த அறிவிப்புகளில் கல்வித்துறைக்கு பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டிருக்கிறது. அந்த வகையில் நாடு முழுவதும் ஐஐடி கல்வி நிறுவனங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் எனவும், இதன் மூலம் கூடுதல் மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்படும் என அறிவித்திருக்கிறார். மேலும் பீகாரில் ஐஐடி பாட்னா விரிவுபடுத்தப்படும், நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 10,000 இடங்கள் உருவாக்கப்படும், என்ற அறிவிப்பு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 50000 அடல் ஆய்வகங்கள் அரசு பள்ளிகளில் ஏற்படுத்தப்படும் எனவும், 5 தேசிய திறன் மையங்கள் அமைக்கப்படும் எனவும் அறிவித்திருக்கிறார். குறிப்பாக உலக அளவில் செயற்கை நுண்ணறிவு எனப்படும் சார்ந்த போட்டியை சமாளிக்கும் வகையில் 500 கோடி ரூபாய் செலவில் செயற்கை நுண்ணறிவை ஊக்குவிக்கும் வகையில் ஒரு மையம் உருவாக்கப்படும் என அறிவித்திருக்கிறார். ஏற்கனவே கூகுள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் தங்களது ஏஐ மாடல்களை சந்தைப்படுத்தியுள்ளன. கூகுளின் ஜெமினி, ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி, மெட்டாவின் லாமா, சீனாவின் டீப்சீக் உள்ளிட்ட ஏஐ மாடல்கள் களத்தில் இருக்கும் நிலையில் இன்னும் சில கால இடைவெளியில் இந்தியாவும் தனது ஏஐ மாடலை உருவாக்கும் என மத்திய அரசு அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications