மாத சம்பளக்காரர்கள் வயிற்றில் பாலை வார்த்த பட்ஜெட்! 12 லட்சம் வரை வரி இல்லை! மற்றவர்களுக்கு எப்படி?
டெல்லி: மத்திய பாஜக அரசு மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்திருக்கும் நிலையில் இந்த ஆட்சிக்காலத்தின் முதல் பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கிறார். இதில் 12 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது. மற்றவர்கள் எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்..
மத்திய அரசின் 2025 - 2026 ஆம் ஆண்டுக்கான இன்று காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து 8வது முறையாக பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருக்கிறார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கிய போது எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இருந்தபோதும் அதனை பொருட்படுத்தாமல் பட்ஜெட்டை வாசித்தார் நிர்மலா சீதாராமன்.
தொடர்ந்து எதிர்க்கட்சிகள் பட்ஜெட் உரையை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர். இருந்த போதும், பட்ஜெட்டை உரையை தொடர்ந்து வாசித்த நிர்மலா சீதாராமன்," உலக அளவில் வேகமாக வளரும் பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியா இருக்கிறது. வளர்ச்சி அடைந்த நாடாக இந்தியாவை உருவாக்கும் பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அனைவருக்குமான வளர்ச்சி என்ற இலக்கை நோக்கி இந்த அரசு பயணித்து வருகிறது என்றார்.
மிகப்பெரிய மாற்றமாக அதிரடியான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். அதாவது மாதம் ஒரு லட்சம் ரூபாய் வருமானம் பெறுபவர்கள் அதாவது ஆண்டுக்கு 12 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுபவர்கள் வரி செலுத்த தேவையில்லை என்ற அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
கூடுதலாக 75 ஆயிரம் ரூபாய் கழிவு வழங்கப்படும் நிலையில் 12 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வரை வருமான வரி உச்ச வரம்பாக நியமிக்கப்பட்டு இருக்கிறது. 2023ல் 7 லட்சமாக உயர்த்தப்பட்ட வருமான வரி உச்சவரம்பு தற்போது 12 லட்சம் ரூபாயாக அதிகரித்து இருக்கிறது. இதன் மூலம் மாதம் ஒரு லட்சம் ரூபாய் வரை மாத ஊதியம் பெறுபவர்கள் வருமான வரி செலுத்த தேவையில்லை.
தற்போதைய அறிவிப்பின்படி நான்கு லட்சம் வரை வருமான வரி இல்லை. 4 லட்சம் முதல் 8 லட்சம் வரை வருமான வருபவர்களுக்கு வரியே கிடையாது 4,00,001லிருந்து 8,00,000 வரை 5%,
8,00,001 முதல் 12,00,000 வரை 10%, 12,00,001 முதல் 16,00,000 வரை 15%, 16,00,001 முதல் 20,00,000 20%, 20,00,001 முதல் 24,00,000 வரை 25%, 24,00,000 மேல் 30% வரை வருமான வரி விகிதமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications