சாத்தியமா? சவாலா? மோடி அரசின் 2026-27 பட்ஜெட் எப்படி? ஒட்டுமொத்த பட்ஜெட்டும் 1 ரூபாயில்! முழு விவரம்!
டெல்லி: 2026-27ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய அரசின் வருமானமும் செலவுகளும் எவ்வாறு திட்டமிடப்பட்டுள்ளன என்பதைக் தெளிவாக விளக்கும் ஆவணங்களையும் வெளியிட்டுள்ளார். இந்த பட்ஜெட்டில் மொத்தமாக ரூ.53.5 லட்சம் கோடி செலவிட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அரசின் மொத்த வருவாய் ரூ.44.04 லட்சம் கோடியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இது ஒரு ரூபாயில் நமது பட்ஜெட்டின் வரவும் செலவும் எப்படி இருக்கும் என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்..
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் ஆவணங்களின் படி, மத்திய அரசு வசூலிக்கும் ஒவ்வொரு ரூபாயும் எந்த வழிகளில் கிடைக்கிறது என்பதையும், அந்த ரூபாய் எவ்வாறு பல்வேறு துறைகளில் செலவிடப்படுகிறது என்பதையும் சதவீத அடிப்படையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
ஒரு சதவீதத்தை நாம் பைசாவாக கணக்கில் கொள்ளலாம். உதாரணத்திற்கு பாதுகாப்பு துறைக்கு 11% நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதனை 11 பைசாவாக கணக்கில் கொள்ள வேண்டும். இதன் மூலம், பொதுமக்கள் செலுத்தும் வரி மற்றும் அரசின் கடன்கள் எந்தெந்த துறைகளுக்கு பயன்படுகின்றன என்பது தெளிவாக புரியும்.

மத்திய பட்ஜெட் 2026-27
அரசின் மொத்த வருமானத்தில் குறிப்பிடத்தக்க பங்கு கடன் மற்றும் பொறுப்புகளிலிருந்தே கிடைக்கிறது. சந்தை கடன்கள், அரசுப் பத்திரங்கள், டிரஷரி பில்கள், ரிசர்வ் வங்கி மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் கடன்கள் ஆகியவை இணைந்து மொத்த வருவாயில் சுமார் 24 சதவீதத்தை உருவாக்குகின்றன. இதுவே மத்திய அரசின் மிகப்பெரிய வருவாய் ஆதாரமாகத் தொடர்கிறது. இதற்கு அடுத்ததாக, தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடமிருந்து வசூலிக்கப்படும் வருமான வரி முக்கிய பங்காற்றுகிறது.
ஒரு ரூபாய் பட்ஜெட்
மொத்த வருவாயில் சுமார் 21 சதவீதம் வருமான வரியிலிருந்து கிடைக்கிறது. அதனைத் தொடர்ந்து, பொருட்கள் மற்றும் சேவைகள் மீது விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரி மூலமாகவும் அரசுக்கு கணிசமான வருவாய் கிடைக்கிறது. இந்த வரி, பொதுமக்கள் வாங்கும் பொருட்கள் மற்றும் சேவைகள் மீது விதிக்கப்படும் மறைமுக வரியாக இருப்பதால், அரசின் நிலையான வருவாய் ஆதாரமாக விளங்குகிறது. நிர்வாகக் கட்டணங்கள், அபராதங்கள், வட்டி வருவாய் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் லாபப் பங்குகள் போன்றவை இணைந்து அரசின் வருவாயில் சுமார் 10 சதவீதத்தை உருவாக்குகின்றன.
சுங்க வரிகள்
மத்திய உற்பத்தி வரிகள் 6 சதவீதம் வருவாயை வழங்கும் நிலையில், சுங்க வரிகள் 4 சதவீத பங்கைக் கொண்டுள்ளன. அரசின் சொத்துகளை விற்பனை செய்வது மற்றும் கடன் மீட்புகள் மூலமாக கிடைக்கும் நிதி, மொத்த வருவாயில் 2 சதவீதமாக கணக்கிடப்பட்டுள்ளது.

வரவு செலவு கணக்கு
அதேபோல், அரசின் செலவுகளிலும் முக்கிய முன்னுரிமைகள் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன. மொத்த செலவில் மிகப்பெரிய பங்கு மாநிலங்களுக்கு வழங்கப்படும் வரிப் பங்காகும். இதற்காக சுமார் 22 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அரசின் கடன்களுக்கு செலுத்தப்படும் வட்டி தொகை 20 சதவீதமாக உள்ளது. மத்திய அரசின் நேரடி திட்டங்களுக்கு 17 சதவீதம் செலவிடப்பட உள்ள நிலையில், நாட்டின் பாதுகாப்புக்கான பாதுகாப்பு செலவுகள் 11 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
நிதி ஒழுங்கு
ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு வழங்கப்படும் மானியங்களுக்கு 6 சதவீதமும், ஓய்வூதியங்களுக்காக 2 சதவீதமும் செலவிடப்பட உள்ளது. இந்த பட்ஜெட், அரசின் ஒவ்வொரு ரூபாயும் எவ்வாறு திட்டமிட்டு பயன்படுத்தப்படுகிறது என்பதை விளக்கும் வகையில் அமைந்துள்ளதால், வளர்ச்சி, நிதி ஒழுங்கு மற்றும் சமூக பாதுகாப்பு ஆகியவற்றுக்கிடையிலான சமநிலையை ஏற்படுத்தும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications