Budget: மத்திய பட்ஜெட்டில் பெண்கள், குழந்தைகளுக்காக வெளியான சூப்பர் அறிவிப்புகள்
டெல்லி: மத்திய அரசின் 2026-27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தக்கல் செய்தார். இந்த பட்ஜெட் இளைஞர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ளது என்று அறிவித்து பட்ஜெட்டை வாசித்தார். இதில் பெண்கள் மற்றும் மாணவர்களுக்காக சில அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அதில் முக்கியமான திட்டங்களை இந்த தொகுப்பில் காணலாம்.
தொழில்முனைவோர் வாய்ப்பு
பெண் தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் மகளிருக்கு She Mart சில்லறை வியாபார கடைகள் அமைக்கப்படும். மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் மகளிருக்கான இந்த தொழில்முனைவோர் திட்டம் செயல்படுத்தப்படும். மகளிருக்கு ரூ .5 லட்சம் வரை வட்டியில்லா கடன் கொடுக்கும் லக்பதி திதி யோஜனா திட்டத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, அதை விரிவாக்கம் செய்யும் வகையில் She Mart திட்டம் அமல்படுத்தப்படுவதாக நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

மகளிர் விடுதி
மேலும் கிராமப்புற மாணவிகளின் கல்வியை ஊக்குவிப்பதற்காக நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாணவிகளுக்கு விடுதி அமைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழ்நாட்டில் தோழி விடுதி திட்டம் பயன்பாட்டில் உள்ளது. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், மத்திய அரசு அத்திட்டத்தை அறிவித்துள்ளது.
லேப்கள்
இந்தியாவில் அனிமேஷன், காட்சி தொடர்பியல் மற்றும் கேமிங் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. மும்பையில் உள்ள இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் கிரியேட்டிவ் டெக்னாலாஜிஸ் உதவியுடன் நாடு முழுவதும் லேப்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி துறையை மேம்படுத்தும் விதமாக தரநிலைக்குழு அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளனர்.
வரி இல்லை
இந்தக் குழு ஏஐ தொழில்நுட்பம் உள்ளிட்டவை மூலம் சேவை துறையை எப்படி மேம்படுத்தலாம் என்று ஆய்வு செய்வார்கள் என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். வெளிநாட்டில் படிக்க செல்லும் மாணவர்களுக்காக இந்தியாவில் இருந்து அனுப்பும் பணத்திற்கு வரிச்சலுகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications