டெல்லி: 2026-27ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இந்த பட்ஜெட் இன்று காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இது நிர்மலா சீதாராமன் தொடர்ந்து தாக்கல் செய்யும் 9வது பட்ஜெட்டாகும். அமெரிக்காவின் வரி விதிப்பு காரணமாக தொழில் துறையினருக்கு சலுகைகள் அறிவிக்கப்படுமா ? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுடான மோதல் மட்டுமின்றி உலகளவில் ஒவ்வொரு நாடுகளும் தனித்தனியே சண்டை செய்து வருகின்றனர். இதனால் மத்திய பாதுகாப்பு துறைக்கு அதிகப்படியான நிதி ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது.
மேலும் இந்த பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பை உயர்த்துவது, தங்கம் - வெள்ளி விலை உயர்வை கட்டுப்படுத்த அதன் மீதான சுங்க வரிகளை குறைத்தல், விவசாயிகள் மற்றும் பெண்களுக்கான பல்வேறு நலத்திட்டங்கள், காப்பீடு திட்ட வரம்பை அதிகரித்தல் உள்பட பல்வேறு அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
அதுமட்டுமின்றி தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தமிழக வாக்காளர்களை கவர புதிய திட்டங்களும், தமிழ்நாட்டுக்கு என்று பிரத்யேக திட்டங்களும் வெளியாகலாம் என்று கூறப்படுகிறது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பட்ஜெட்டின் இன்றைய புதிய அப்டேட்டுகளை இங்கு முழுமையாக பெறலாம்.
Feb 01, 2026, 3:23 pm IST
பட்ஜெட் உரைக்கு பிறகு, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர் சந்திப்பு
Feb 01, 2026, 3:23 pm IST
இந்திய பொருளாதார வளர்ச்சியை தக்கவைத்துக்கொள்வதே தற்போதைய நோக்கம்- நிர்மலா சீதாராமன்
Feb 01, 2026, 3:23 pm IST
நாட்டின் நீடித்த வளர்ச்சிக்குத் தேவையான சூழலை உருவாக்குவதே முதன்மையான இலக்கு - நிர்மலா சீதாராமன்
Feb 01, 2026, 3:23 pm IST
பல சீர்திருத்தங்கள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளன, அவை தொடரும்- நிர்மலா சீதாராமன்
Feb 01, 2026, 3:22 pm IST
உற்பத்தித்திறன் & வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் தேவையான நடவடிக்கை எடுப்போம்- நிர்மலா சீதாராமன்
Feb 01, 2026, 3:22 pm IST
நகர்ப்புற வளர்ச்சிக்கு ஆண்டுதோறும் ஒரு நகரத்திற்கு ₹1000 கோடி ஒதுக்கப்படும்- நிர்மலா சீதாராமன்
தனிநபர் வருமான வரியில் மாற்றமில்லை - நிர்மலா சீதாராமன்
தனிநபர் வருமான வரி விலக்கில் மாற்றமில்லை. தனிநபர் வருமான வரி விலக்கு வழங்கப்படும் என்று பலரும் எதிர்பார்த்த நிலையில் அதுபற்றிய அறிவிப்பு நிர்மலா சீதாராமனின் பட்ஜெட்டில் வெளியாகவில்லை - நிர்மலா சீதாராமன்.
Feb 01, 2026, 12:33 pm IST
2026-27 ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிறைவு செய்தார் நிர்மலா சீதாராமன்.
Feb 01, 2026, 12:28 pm IST
7 அரியவகை நோய்களுக்கான மருந்துகளுக்கு வரி விலக்கு - நிர்மலா சீதாராமன்
விமான உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைவு - நிர்மலா சீதாராமன்
Feb 01, 2026, 12:26 pm IST
புற்றுநோய் உள்பட பல்வேறு உடல்நல பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான 17 வகை மருந்துகளுக்கு அடிப்படை சுங்க வரியில் இருந்து விலக்கு - நிர்மலா சீதாராமன்
Feb 01, 2026, 12:23 pm IST
மின்சார வாகனங்களை ஊக்குவிக்க லித்தியம் பேட்டரிகளுக்கு இறக்குமதி வரி கிடையாது - நிர்மலா சீதாராமன்
Feb 01, 2026, 12:22 pm IST
மின்சார வாகனங்களுக்கான லித்தியம் பேட்டரிக்கு வரி கிடையாது - நிர்மலா சீதாராமன்
Feb 01, 2026, 12:22 pm IST
லித்தியம் பேட்டரிக்கு வரி கிடையாது - நிர்மலா சீதாராமன்
Feb 01, 2026, 12:21 pm IST
வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு பணம் அனுப்புவதற்கான வரி குறைப்பு - நிர்மலா சீதாராமன்
Feb 01, 2026, 12:20 pm IST
காலணிகள் ஏற்றுமதிக்கான மூலப்பொருட்களை வரியில்லாமல் இறக்குமதி செய்ய சலுகைகள் அறிவிப்பு - நிர்மலா சீதாராமன்
Feb 01, 2026, 12:18 pm IST
பல்வேறு பொருட்களுக்கான ஏற்றுமதி கலால் வரி குறைப்பு - நிர்மலா சீதாராமன்
Feb 01, 2026, 12:17 pm IST
நிதி பற்றாக்குறை 4.4% ஆக உள்ளது - நிர்மலா சீதாராமன்
மத்திய அரசின் நிதி பற்றாக்குறை ஜிடிபியில் 4.4 சதவீதமாக உள்ளது. 2027 ல் நிதி பற்றாக்குறை 4.3 சதவீதமாக இருக்கும் - நிர்மலா சீதாராமன்
Feb 01, 2026, 12:14 pm IST
NRI-க்கள் தங்களின் சொத்துகளை விற்கும்போது அதன் டிடிஎஸ் விகிதங்களில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது - நிர்மலா சீதாராமன்
Feb 01, 2026, 12:12 pm IST
இந்தியாவில் டேட்டா சென்டர்கள் அமைக்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு 2047 ம் ஆண்டு வரை வரி சலுகை - நிர்மலா சீதாராமன்
Feb 01, 2026, 12:11 pm IST
வெளிநாட்டு சுற்றுலாவுக்கான வரி பிடித்தகம் 2 சதவீதமாக குறைப்பு - நிர்மலா சீதாராமன்
Feb 01, 2026, 12:11 pm IST
வருமான வரி காலஅவகாசம் நீட்டிப்பு - நிர்மலா சீதாராமன்
வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் டிசம்பர் இறுதிக்கு பதிலாக மார்ச் இறுதி வரை நீட்டிக்கப்படும் - நிர்மலா சீதாராமன்
Feb 01, 2026, 12:08 pm IST
கல்வி சுகாதாரத்திற்கான டிசிஎஸ் 2 சதவீதம் ஆக குறைப்பு - நிர்மலா சீதாராமன்
Feb 01, 2026, 12:08 pm IST
வருமானத்தை மறைத்தால் 100 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் - நிர்மலா சீதாராமன்
Feb 01, 2026, 12:06 pm IST
தனிநபர்கள் போல் நிறுவனங்களுக்கும் வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது - நிர்மலா சீதாராமன்
Feb 01, 2026, 12:02 pm IST
விபத்து கால காப்பீடுகளுக்கு வருமான வரி விலக்கு - நிர்மலா சீதாராமன்
Feb 01, 2026, 12:01 pm IST
வருமான வரி தாக்கல் செய்வதற்கான நடைமுறை எளிமையானதாக மாற்றப்படும் - நிர்மலா சீதாராமன்
Feb 01, 2026, 12:01 pm IST
எளிமையாகிறது வருமான வரி தாக்கல் நடைமுறைகள் - நிர்மலா சீதாராமன்
READ MORE
9:09 AM, 1 Feb
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதையொட்டி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நிதி அமைச்சகத்துக்கு வருகை
9:20 AM, 1 Feb
இன்று காலை 11 மணிக்கு மத்திய பொதுபட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
9:25 AM, 1 Feb
தமிழ்நாட்டுக்கு அடிக்கப்போகும் ஜாக்பாட்?
தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதால் மத்திய பட்ஜெட்டில் நம் மாநிலத்துக்கு கூடுதல் நிதி, பிரத்யேக திட்டங்கள் என்று மக்களை கவரும் வகையில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு. அதேபோல் தேர்தலை எதிர்கொள்ள உள்ள கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட மாநிலங்களுக்கும், புதுச்சேரிக்கும் அதிர்ஷ்டம் அடிக்கலாம்.
9:33 AM, 1 Feb
மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய தயாராகி தனது குழுவினருடன் மத்திய நிதி அமைச்சக அலுவலகத்தில் போட்டோவுக்கு போஸ் கொடுத்த நிர்மலா சீதாராமன்.
#WATCH | Delhi: Union Finance Minister Nirmala Sitharaman, along with her team, with the Budget tablet outside the Ministry of Finance.
நிர்மலா சீதாராமனுக்கு தயிர் இனிப்பு ஊட்டிய ஜனாதிபதி
பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக நிர்மலா சீதாரமன், ஜனாதிபதி திரெளபதி முர்முவை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது ஜனாதிபதி திரெளபதி முர்மு தயிருடன் இனிப்பு கலந்து நிர்மலா சீதாராமனுக்கு ஊட்டினார்.
#WATCH | President Droupadi Murmu feeds Union Finance Minister Nirmala Sitharaman the customary 'dahi-cheeni' (curd and sugar) ahead of her ninth consecutive Union Budget presentation. pic.twitter.com/WouiznFEMr
நிர்மலா சீதாராமன் தமிழ்நாட்டின் பழமையான கலாச்சார பாரம்பரியத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக கைத்தறி நெசவில் உருவான மெரூன் நிற காஞ்சிபுரம் புடவை அணிந்து பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளார்.
#UnionBudget2026 | Union Finance Minister Nirmala Sitharaman and MoS Finance Pankaj Chaudhary, along with their team, arrive at the Parliament. pic.twitter.com/Zxo7HDObEn
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் 2026-27 ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் சற்று நேரத்தில் மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்.
10:41 AM, 1 Feb
பட்ஜெட் தாக்கலுக்கு முன்பாக நிர்மலா சீதாரமன், ஜனாதிபதி திரெளபதி முர்முவை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது ஜனாதிபதி திரெளபதி முர்மு தயிருடன் இனிப்பு கலந்து நிர்மலா சீதாராமனுக்கு ஊட்டினார்.
11:04 AM, 1 Feb
மத்திய பட்ஜெட் உரையை தொடங்கினார் நிர்மலா சீதாராமன்
2026-27 ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து வருகிறார்.
தன்னிறைவு இந்தியா என்ற இலக்கை நோக்கி நாம் வேகமாக முன்னேறி வருகிறோம். பணவீக்கத்தை முறையாக கட்டுப்படுத்தியதால் நாட்டின் வளர்ச்சி மேம்பட்டுள்ளது - நிர்மலா சீதாராமன்
11:07 AM, 1 Feb
புதிய தொழில்நுட்பங்கள் மூலம் உற்பத்தி துறை பலமடங்கு வளர்ச்சி. கர்த்தவ்ய பவனில் தயாரித்த முதல் பட்ஜெட் இதுவாகும் - நிர்மலா சீதாராமன்
11:08 AM, 1 Feb
மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருக்கும் நாட்டு மக்களுக்கு நன்றிகள் - நிர்மலா சீதாராமன்
11:11 AM, 1 Feb
அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. இளைஞர்களின் கரங்களை வலுப்படுத்தும் வகையில் இந்த பட்ஜெட் இருக்கும் - நிர்மலா சீதாராமன்
11:13 AM, 1 Feb
பல்வேறு நோய்களுக்கன மருந்தகள் இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கிறது - நிர்மலா சீதாராமன்
11:17 AM, 1 Feb
தொடர் வளர்ச்சி, உற்பத்தி அதிகரிப்பு, பொருளாதார மேம்பாட்டை அடிப்படையாக வைத்து பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது - நிர்மலா சீதாராமன்
11:17 AM, 1 Feb
தமிழகம், கேரளா, ஒடிசாவில் அரிய வகை கனிமங்களை ஆய்வு செய்ய மையம் அமைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்
11:17 AM, 1 Feb
பயோ பார்மா சக்தி திட்டம் கொண்டு வரப்படும். இதற்காக ரூ.10,000 கோடியில் பயோ பார்மா சக்தி திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. செமி கண்டக்டர் துறைக்கு ரூ.40,000 கோடி ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன்
11:21 AM, 1 Feb
உள்கட்டமைப்பு எந்திரங்களின் உற்பத்தி ஆலைகள் அமைக்க ரூ.10,000 கோடி ஒதுக்கீடு - நிர்மலா சீதாராமன்
11:23 AM, 1 Feb
ஜவுளி துறையில் தன்னிறைவு பெறுவதற்கு புதிய திட்டம் அறிவிக்கப்படுகிறது. மகாத்மா காந்தி ஸ்வராஜ் திட்டம் என்ற பெயரில் 4 மெகா ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்
11:25 AM, 1 Feb
சிறு, குறு, தொழில்துறைக்கு 3 முக்கிய திட்டங்கள் அறிவிக்கப்படுகிறது. ரூ.10,000 கோடியில் மும்முனை திட்டம் செயல்படுத்தப்படும் - நிர்மலா சீதாராமன்
11:27 AM, 1 Feb
மூலதன செலவு ஒதுக்கீடு ரூ.12.2 லட்சம் கோடியாக உயர்வு - நிர்மலா சீதாராமன்
11:28 AM, 1 Feb
இந்தியாவில் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என அனைத்து பிராந்தியங்களையும் இணைக்க நீர்வழி முனையம் அமைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்
11:33 AM, 1 Feb
7 அதிவேக ரயில் வழித்தடம் அமைக்கப்படும். மும்பை - புனே, புனே- ஹைதராபாத், ஹைதரபாத் - சென்னை, சென்னை - பெங்களூர், ஹைதராபாத் - பெங்களூர், டெல்லி வாரணாசி, வாரணாசி - சிலிகுரி உள்பட 7 வழித்தடங்களில் அதிவேக ரயில் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது.
11:35 AM, 1 Feb
வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு முதலீட்டு வரம்பு 5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக ஆக உயர்த்தப்படும் - நிர்மலா சீதாராமன்
11:39 AM, 1 Feb
மருத்துவ சுற்றுலாவை அதிகரிக்க நாடு முழுவதும் 5 மருத்துவ முனையங்கள் அமைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்
11:40 AM, 1 Feb
இந்தியாவின் ஆயுர்வேத மருந்துகளை ஏற்றுமதி செய் ஆயுர்வேத மையங்கள் அமைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்
11:42 AM, 1 Feb
பல முக்கியமான சுற்றுலா தலங்களில் சுற்றுலா வழிக்காட்டிகளை உருவாக்க புதிய திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இது புதிய வேலைவாய்ப்புகளையும், கன்டென்ட் கிரியேட்டர்களையும் உருவாக்கும் - நிர்மலா சீதாராமன்.
11:42 AM, 1 Feb
நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பெண்களுக்கு விடுதிகள் அமைக்கப்படும் - நிர்மலா சீதாராமன்
11:44 AM, 1 Feb
இந்தியாவில் தொல்லியல் துறையால் பராமரிக்கப்படும் தலங்களான ஆதிச்சநல்லூர் உள்பட 60 இடங்கள் கலாசார மையம் அமைத்து பொதுமக்களின் பார்வைக்காக அனுமதிக்கப்படும் - நிர்மலா சீதாராமன்
Union Budget (மத்திய பட்ஜெட்) 2026 LIVE Updates: நிர்மலா சீதாராமன் பட்ஜெட் 2026: வருமான வரி அதிரடி மாற்றம், துறைவாரியான முக்கிய அறிவிப்புகள் மற்றும் பொருளாதார தாக்கங்கள் குறித்து நேரலை செய்திகளை அறிய இந்த பக்கத்தில் இணைந்திருங்கள் . Follow the Finance Minister’s budget speech, key announcements, income tax changes, and sector-wise impact with real-time updates on Oneindia Tamil.
Notifications
Settings
Clear Notifications
No New Notifications
Notifications
Use the toggle to switch on notifications
Block for 8 hours
Block for 12 hours
Block for 24 hours
Don't block
To start receiving timely alerts, as shown below click on the Green “lock” icon next to the address bar
Click it and Unblock the Notifications
Close X
Close X
To Start receiving timely alerts please follow the below steps:
Click on the Menu icon of the browser, it opens up a list of options.
Click on the “Options ”, it opens up the settings page,
Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
Scroll down the page to the “Permission” section .
Here click on the “Settings” tab of the Notification option.
A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.