கொரோனாவுக்குப் பின் குறைந்த பட்ஜெட் உரை நேரம்! நிர்மலா சீதாராமனின் உரைகளின் நீளம் எவ்வளவு தெரியுமா?
டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2026ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இதன் மூலம், அவர் தொடர்ந்து 9வது முறையாக மத்திய பட்ஜெட்டை வாசித்துள்ள நிதியமைச்சராக உள்ளார். இந்த சாதனையின் மூலம், இந்திய வரலாற்றில் அதிக முறை பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர்கள் பட்டியலில் அவர் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். இந்நிலையில், 2019ஆம் ஆண்டு முதல் இன்று வரை நிர்மலா சீதாராமன் வாசித்த பட்ஜெட் உரைகளின் நீளத்தை பார்க்கலாம்..
2019ஆம் ஆண்டு முதல் இன்று வரை நிர்மலா சீதாராமன் வாசித்துள்ள பட்ஜெட் உரைகள், அவற்றின் நீளம் குறித்து பார்க்கையில், முதல் முறையாக 2019-20ஆம் ஆண்டில் பட்ஜெட்டை தாக்கல் செய்த போது, அவர் சுமார் 2 மணி நேரம் 15 நிமிடங்கள் தொடர்ந்து உரையாற்றினார்.
அதற்கு அடுத்த ஆண்டான 2020-21ஆம் நிதியாண்டில், பட்ஜெட் உரை மேலும் நீண்டதாக இருந்து, 2 மணி நேரம் 42 நிமிடங்கள் வரை நீடித்தது. இது இதுவரை அவர் வாசித்த பட்ஜெட் உரைகளில் நீளமானதாகக் கருதப்படுகிறது.

நிர்மலா சீதாராமன்
கொரோனா காலகட்டத்துக்குப் பிறகு பட்ஜெட் உரைகளின் நீளம் படிப்படியாக குறையத் தொடங்கியது. 2021-22ஆம் ஆண்டில் அவரது உரை சுமார் 1 மணி நேரம் 40 நிமிடங்களாக இருந்தது. 2022-23ஆம் ஆண்டில் அது மேலும் குறைந்து 1 மணி நேரம் 32 நிமிடங்களாக அமைந்தது. 2023-24ஆம் ஆண்டில் பட்ஜெட் உரை சுமார் 1 மணி நேரம் 26 நிமிடங்கள் நீடித்தது. அதே ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட் உரை 57 நிமிடங்களில் முடிவடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பட்ஜெட் உரை நேரம்
அதனைத் தொடர்ந்து 2024-25ஆம் ஆண்டில் நிர்மலா சீதாராமன் வாசித்த பட்ஜெட் உரை சுமார் 1 மணி நேரம் 25 நிமிடங்கள் நீடித்தது. 2025-26ஆம் ஆண்டில் அது சற்றுக் குறைந்து 1 மணி நேரம் 15 நிமிடங்களாக இருந்தது. தற்போது 2026ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் உரை சுமார் 1 மணி நேரம் 25 நிமிடங்கள் வரை நீடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சுதந்திர இந்தியா வரலாற்றை எடுத்துக்கொண்டால், இதுவரை மொத்தம் 88 மத்திய பட்ஜெட்டுகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் முழு பட்ஜெட்டுகளும், தேர்தலுக்கு முன்பான இடைக்கால பட்ஜெட்டுகளும் அடங்கும்.
தமிழர்களின் பட்ஜெட்
இந்த 88 பட்ஜெட்டுகளில் 27 பட்ஜெட்டுகள் தமிழர்களால் சமர்ப்பிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்க மற்றும் பெருமை கொள்ளத்தக்க தகவலாக உள்ளது. இந்தியாவின் முதல் மத்திய பட்ஜெட்டையே கோவையில் பிறந்த ஆர்.கே. சண்முகம் செட்டியார் 1947 மற்றும் 1948ஆம் ஆண்டுகளில் தாக்கல் செய்தார். திருவள்ளூரை பூர்வீகமாகக் கொண்ட டி.டி. கிருஷ்ணமாச்சாரி 1957ஆம் ஆண்டு இரண்டு முறை மற்றும் 1964, 1965 ஆகிய ஆண்டுகளில் தலா ஒரு முறை என மொத்தம் நான்கு பட்ஜெட்டுகளை தாக்கல் செய்துள்ளார்.
நிதிநிலை அறிக்கை
அதேபோல், கோவை மாவட்டம் பொள்ளாச்சியைச் சேர்ந்த சி. சுப்பிரமணியம் 1975 மற்றும் 1976ஆம் ஆண்டுகளில் பட்ஜெட் சமர்ப்பித்துள்ளார். தஞ்சாவூர் அருகே ராஜாமடத்தைச் சேர்ந்த ஆர். வெங்கட்ராமன் 1980 மற்றும் 1981ஆம் ஆண்டுகளில் நிதிநிலை அறிக்கைகளை வாசித்துள்ளார்.
ப. சிதம்பரம்
காரைக்குடியைச் சேர்ந்த ப. சிதம்பரம் 1996, 1997, 2004 முதல் 2008 வரை தொடர்ச்சியாகவும், பின்னர் 2013, 2014 ஆகிய ஆண்டுகளிலும் என மொத்தம் 9 முறை மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து இரண்டாவது இடத்தில் உள்ளார். மொரார்ஜி தேசாய் 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்து முதலிடத்தில் உள்ள நிலையில், தற்போது மதுரையில் பிறந்த நிர்மலா சீதாராமன் 9வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்து ப. சிதம்பரத்தின் சாதனையை சமன் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications