Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

NCERT புத்தகங்களை விடுங்க.. இந்தியாவை பாரத் என மாற்ற மத்திய அமைச்சரவைக்கு ரயில்வே கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய ரயில்வே துறையில் உள்ள ஆவணங்களில் இந்தியா என்பதற்கு பதில் பாரத் என மாற்ற மத்திய அமைச்சரவைக்கு ரயில்வே துறை அமைச்சகம் கோரிக்கை வைத்துள்ளது.

Union Cabinet also opts for Bharat instead of India

ஜி20 மாநாட்டை இந்தியா தலைமையேற்று இந்த ஆண்டு நடத்தியது. இதற்காக மாநில முதல்வர்களுக்கு உணவு விருந்தளிக்க முடிவு செய்த குடியரசுத் தலைவர் அதற்கான அழைப்பிதழில் President of India என்பதற்கு பதில் President of Bharat என அச்சிடப்பட்டிருந்தது. இது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

அது போல் ஜி20 மாநாட்டு மேடையில் பிரதமர் மோடி பேசிய போது அவரது முன்னால் இருந்த பெயர் பலகையில் பாரத் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் ஆட்சேபம் தெரிவித்த போது இந்தியாவை பாரத் என அழைப்பதில் என்ன தவறு இருக்கிறது என மத்திய அரசு கேள்வி எழுப்பியது.

மேலும் அரசியலமைப்பு சட்டத்திலும் பாரத் என்ற வார்த்தை உபயோகப்படுத்தப்பட்டுள்ளது என்றும் தெரிவித்திருந்தனர். இதையடுத்து திடீரென அண்மையில் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் அறிவிக்கப்பட்டது. எந்த அஜெண்டாவும் அறிவிக்காமல் திடீரென கூட்டம் குறித்த அறிவிப்பால் பாரத் பெயர் மாற்றத்திற்கானது என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து இந்த கூட்டத் தொடர் பாரத் பெயர் மாற்றத்திற்கு கூட வில்லை என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெளிவுப்படுத்தினார். இந்த விவகாரம் சற்று ஆற போட்டிருந்த நிலையில் அண்மையில் மத்திய அரசு பாட புத்தகங்களில் அதாவது என்சிஇஆர்டி புத்தகங்களில் பாரத் என பெயர் மாற்றம் செய்யப்படுவதாக ஒரு அதிர்ச்சி தகவல் வந்தது.

இதையடுத்து என்சிஇஆர்டி ஆணையமோ பாடபுத்தகங்களில் பாரத் என பெயர் மாற்றம் இப்போது இல்லை, அது குறித்த கோரிக்கைதான் வைக்கப்பட்டது என விளக்கமளித்தது. தற்போது மத்திய அரசு ஆவணங்களில் இந்தியாவுக்கு பதிலாக பாரத் என குறிப்பிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் இந்திய ரயில்வே துறையில் உள்ள ஆவணங்களில் இந்தியா என்பதற்கு பதிலாக பாரத் என பெயர் மாற்றம் செய்ய ஒப்புதல் அளிக்குமாறு மத்திய அமைச்சரவைக்கு கோரிக்கை மனு சென்றுள்ளது.

Union Cabinet also opts for Bharat instead of India

இந்தியா பெயர் மாற்றம் தொடர்பாக மத்திய அமைச்சரவைக்கு சென்ற முதல் கோரிக்கை இதுதான். இதனால் நாட்டின் பொருளாதாரம், சரக்கு மாதிரிகள், செலவினங்களில் இந்தியா என்பதற்கு பதிலாக பாரத்தை தொடர்ந்து பயன்படுத்துவதற்கான முதல் முன்மொழிவு இது என தெரிகிறது. அரசு ஆவணங்களில் இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற அரசியலமைப்பு சட்டம் அனுமதிக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+