2027ல் சாதிவாரி + மக்கள் தொகை கணக்கெடுப்பு.. ரூ.11,718 கோடியை இறக்கும் மத்திய அரசு.. மெகா முடிவு
டெல்லி: மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், 2027ம் ஆண்டு கணக்கெடுப்பை நடத்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்திருந்தது. இது சாதி வாரி கணக்கெடுப்பாகவும் நடத்தப்பட இருக்கிறது. இந்நிலையில் இதற்காக ரூ.11,718 கோடி ஒதுக்க மத்திய அரசு முடிவெடுத்திருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் கூட்டப்பட்டது. இந்த கூட்டத்தில் ரூ.11,718 கோடி ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. கடைசியாக கடந்த 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. இடஒதுக்கீடு, நலத்திட்டங்களை அமல்படுத்துவதற்கு மக்கள் தொகை எண்ணிக்கை மிகவும் முக்கியம்.

கடந்த 2020-2021 காலகட்டங்களில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பை ஏற்படுத்தியிருந்ததால், மக்கள் தொகை கணக்கெடுப்பு நடக்கவில்லை. இதனையடுத்த 2022, 2023 காலகட்டங்களில் கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. ஆனால், மத்திய அரசு இதனை காதில் வாங்கிக்கொள்ளவில்லை. கோரிக்கைகள் வலுக்கவே, 2027ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.
இந்த கணக்கெடுப்பு 2 கட்டங்களாக மேற்கொள்ளப்படும். முதல் கட்டம் முதலாவது ஏப்ரல் மற்றும் செப்டம்பர் 2026 க்கும் இரண்டாவது பிப்ரவரி 2027 க்கும் இடையில் நடத்தப்படும். இரண்டாம் கட்டத்தின்போது சாதிவாரியான தரவுகள் மின்னணு முறையில் பதிவு செய்யப்படும்.
லடாக், ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் என குளிர் பிரதேசங்களில் மக்கள் கணக்கெடுப்பு அடுத்த ஆண்டு செப்டம்பரில் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதற்காக கணக்கெடுப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள் மாநில, மாவட்ட நிர்வாகங்கள் 30 லட்சம் களப்பணியாளர்களை பணியமர்த்தும் என மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications