8 புதிய ரயில்வே திட்டங்கள்.. 2 கோடி வீடுகள்.. 7 மாநிலத்திற்கு ஜாக்பாட்.. மத்திய அரசு ஒப்புதல்
டெல்லி: டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், புதியதாக 8 ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வரும் 2031 நிதியாண்டு வரையிலான இந்த பணிகளுக்கு, 24 ஆயிரத்து 657 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். மேலும் 2 கோடி வீடுகளை கட்டுவதற்கு ரூ.3.06 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யவும் கேபினட் கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், புதிதாக 8 ரயில்வே திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ரூ.24,657 கோடி மதிப்பீட்டில் இந்த திட்டங்களை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

8 புதிய ரயில்வே திட்டங்கள்: அமைச்சரவைக் கூட்டத்திற்குபிறகு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ரூபாய் 24,657 கோடி மதிப்பீட்டில் 8 ரயில்வே திட்டங்களுக்கு அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. புதிய வழித்தட திட்டங்கள் நேரடி தொடர்பு மற்றும் ரயில்வேயின் சேவை, செயல் திறன், நம்பகத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்தும்" என்றார்.
7 மாநிலங்களுக்கு பயன்: இந்த ரயில்வே திட்டங்கள் 7 மாநிலங்களில் உள்ள 14 மாவட்டங்கள் வழியாக செல்லும் வழித்தட திறனை மேம்படுத்தும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது. அதாவது, ஒடிசா, மகாராஷ்டிரா, ஆந்திரா, ஜார்க்கண்ட், பீகார், தெலுங்கானா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்கள் வழியாக ரயில்வேயின் 8 திட்டங்களும் செயல்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
64 புதிய ரயில் நிலையங்கள்: இந்த திட்டத்தின் மூலம் புதிதாக 64 ரயில் நிலையங்கள் கட்டப்படும். இதன் மூலம், கிழக்கு சிங்கபம், பதாதரி கோதகுடேம், மல்கனகிரி, கல்கண்டி, நபரங்கபூர், ராயகடா, ஆகிய 6 மாவாட்டங்களுக்கு கனெக்டிவிட்டியை மேம்டுத்தும். தோராயமாக 510 கிராமங்களில் உள்ள 40 லட்சம் மக்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள்.
விவசாய பொருட்கள், உரங்கள், நிலக்கரி, இரும்பு, சிமெண்ட், சுண்ணாம்பு, அலுமினிய பவுடர், கிரனைட் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்வதற்கும் இந்த வழித்தடம் மிக முக்கியமானதாக இருக்கும். யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான அஜந்தா குகைகள் இந்திய ரயில்வே நெட்வொர்க்குடன் இணைக்கப்பட உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 கோடி வீடுகள்: இது மட்டும் இன்றி கிராமப்புறங்களில் 2 கோடி வீடுகளை கட்டுவதற்கு ரூ.3.06 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யவும் கேபினட் கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது. பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கிராமின் திட்டத்தின் கீழ் அடுத்த 5 ஆண்டுகளில் கட்டப்படும் வீடுகளின் மூலம் 1 கோடி பேர் பயனடைவார்கள். இந்த திட்டத்தின் கீழ் சமவெளிப் பகுதிகளில் கட்டப்படும் வீடுகளுக்கு 1.2 லட்சமும், வடகிழக்கு மற்றும் மலை மாநிலங்களில் கட்டப்படும் வீடுகளுக்கு ரூ.1.3 லட்சமும் நிதி உதவி வழங்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications