Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாடு,குஜராத்தில் கடற்கரைக்கு அப்பால் காற்றலை திட்டங்கள்-ரூ.7453கோடி ஒதுக்கீடு- மத்திய அமைச்சரவை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழ்நாடு மற்றும் குஜராத்தில் கடற்கரைக்கு அப்பால் காற்றாலை திட்டங்கள் (Offshore Wind Energy Projects) செயல்படுத்த ரூ7453 கோடி ஒதுக்கீடு செய்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது.

இது தொடர்பான மத்திய அரசு அறிக்கை: டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவை, கடற்கரைக்கு அப்பால் காற்றாலை எரிசக்தித் திட்டங்களை அமல்படுத்துவதில் சாத்தியக்கூறு இடைவெளி நிதியளிப்புக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

union cabinet Narendra Modi

தமிழ்நாட்டிலும், குஜராத்திலும் தலா 500 மெகா வாட் என மொத்தம் ஒரு ஜிகா வாட் மின்னுற்பத்திக்கு கடற்கரைக்கு அப்பால், காற்றாலை எரிசக்தித் திட்டங்களை நிறுவுதல், மற்றும் இயக்குதலுக்கான ரூ. 6853 கோடி உட்பட இவற்றுக்கான மொத்த ஒதுக்கீடு ரூ. 7453 கோடியாகும்.

இந்தத் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்படும் போது, ஆண்டுக்கு 372 கோடி யூனிட் புதுப்பிக்க வல்ல மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும். இதனால் அடுத்த 25 ஆண்டுகளில் ஆண்டுக்கு 2.98 மில்லியன் டன் கரியமிலவாயு வெளியேற்றம் குறைக்கப்படும்.

மேலும் மகாராஷ்டிராவின் தகானு அருகே வாதவனில் பெரிய துறைமுகம் ஒன்றை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையம் மற்றும் மகாராஷ்டிரா கடல்சார் வாரியம் இணைந்து இந்தத் துறைமுகத்தை அமைக்க உள்ளன. இத்திட்டத்திற்கான மொத்த மதிப்பீடு ரூ.76,220 கோடியாகும். இந்தத் துறைமுகத்தில் 1000 மீட்டர் நீளமுள்ள ஒன்பது சரக்குப் பெட்டக முனையங்கள், கடலோர பெட்டக முனையம் உட்பட நான்கு பல்நோக்கு முனையங்கள் அமைக்கப்படும். இந்தத் துறைமுகத்தில் திட்டம் ஆண்டுக்கு 298 மில்லியன் மெட்ரிக் டன் சரக்கைக் கையாளும் வகையில் அமைக்கப்பட உள்ளது.

பிரதமரின் விரைவு சக்தி பெருந்திட்ட நோக்கத்துடன் இணைந்த இந்தத் திட்டம், பொருளாதார நடவடிக்கைகளுக்கு வலு சேர்க்கும். இத்துறைமுகம் மூலம் சுமார் 10 லட்சம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகள் உருவாகும்.

அத்துடன் வாரணாசியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி சர்வதேச விமான நிலையத்தை மேம்படுத்துவதற்கான இந்திய விமான நிலைய ஆணையத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. விமான நிலையத்தின் பயணிகள் கையாளும் திறனை ஆண்டுக்கு 39 லட்சத்திலிருந்து 99 லட்சமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான செலவு ரூ.2869.65 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. 75,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட புதிய முனையக் கட்டடம் ஒரே நேரத்தில் 5000 பயணிகளை கையாளும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது.

இந்த திட்டத்தில் ஓடுபாதையை நீட்டிப்பது உள்ளிட்ட பணிகளும் அடங்கும். சுற்றுச்சூழல் நிலைத்தன்மையை உறுதி செய்யும் முதன்மை நோக்கத்துடன் வாரணாசி விமான நிலையம் பசுமை விமான நிலையமாக உருவாக்கப்படும்.

தடவியல் துறை: 2024-25-ம் ஆண்டு முதல் 2028-29-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் ரூ.2254.43 கோடி மொத்த நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசின் சார்பில் "தேசிய தடய அறிவியல் கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம்" என்ற திட்டத்திற்கான முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டம் உள்துறை அமைச்சகத்தின் சார்பில் செயல்படுத்தப்படும்.

இத்திட்டத்தின் கீழ் கீழ்க்கண்ட அம்சங்களை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது:

i. நாட்டில் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழக வளாகங்களை உருவாக்குதல்.

ii. நாட்டில் மத்திய தடய அறிவியல் ஆய்வகங்களை நிறுவுதல்.

iii. தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் தில்லி வளாகத்தில் தற்போதுள்ள உள்கட்டமைப்பை மேம்படுத்துதல்.

ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.

திறன் வாய்ந்த தடய அறிவியல் நடைமுறைகள் மூலம் குற்றவாளிகளை கண்டறிந்து வலுவான நீதி அமைப்பை உருவாக்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. விஞ்ஞான ரீதியான தடயவியல் பரிசோதனையில் உயர்தர செயல்முறை, பயிற்சி பெற்ற தடயவியல் நிபுணர்களை அதிகரித்தல் போன்றவையும் இத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+