இனி ZOHO சாப்ட்வேர் மட்டும் தான்! கூகுள் - மைக்ரோசாப்ட்டுக்கு குட்பை.. மத்திய கல்வித்துறை உத்தரவு
டெல்லி: மத்திய கல்வித்துறையில் கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்டஅமெரிக்க நிறுவனங்களின் சாப்ட்வேரை பயன்படுத்த வேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக ஜோஹோவின் சாப்ட்வேரை பயன்படுத்த வேண்டும் என்று அனைத்து பிரிவு அதிகாரிகளுக்கும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம் நாட்டுக்கு 50 சதவீத வரிகளை போட்டுள்ளார். அதுமட்டுமின்றி அமெரிக்க நிறுவனங்களில் இருக்கும் பணியிடங்களில் அமெரிக்கர்களை மட்டுமே பணியமர்த்த வேண்டும் என்ற கொள்கையில் டிரம்ப் உள்ளார். இதன் தொடக்கப்புள்ளியாக தான் எச் 1 பி விசா கட்டணத்தை டிரம்ப் உயர்த்தி உள்ளார்.

அமெரிக்காவில் தங்கி பணிபுரிய இந்த எச் 1பி விசா கட்டாயம். இதற்கான கட்டணத்தை ரூ.88 லட்சமாக உயர்த்தி உள்ளார். இந்த விசாவால் இந்தியர்கள் அதிகம் பயனடைந்த நிலையில் இப்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது. டிரம்பின் வரி மற்றும் எச் 1பி விசா கட்டண உயர்வு என்பது நம் நாட்டுக்கு பெரிய சிக்கலாக மாறி உள்ளது.
இதனால் பிரதமர் மோடி, உள்நாட்டு தயாரிப்புகளை மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று கூறி வருகிறார். அந்த வகையில் தான் மத்திய கல்வித்துறை அமைச்சகம் சார்பில் அனைத்து அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதில், ‛‛மத்திய கல்வி அமைச்சகத்தில் அனைத்து அதிகாரிகளும் ஜோஹோ ஆபிஸ் சூட்டை (Zoho Office Suite) தான் பயன்படுத்த வேண்டும். டாக்குமென்டேஷன் தயாரிப்பு பணிகளுக்கு வெளிநாடுகளின் சாப்ட்வேரை பயன்படுத்த கூடாது. ஜோஹோவின் தயாரிப்பை பயன்படுத்துவதன் மூலம் உள்நாட்டு தொழிலை ஊக்குவிக்க வேண்டும். அதேபோல் சுதேசி இயக்கத்தை திறம்பட செயல்படுத்த முடியும்.
டிஜிட்டல் துறையில் இந்திய நிறுவனங்களின் தயாரிப்புகளை பயன்படுத்தி அதன் வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டும். அதேபோல் வெளிநாடுகளின் சாப்ட்வேரை நம்பியிருப்பதை குறைக்க வேண்டும். இதற்கான ஒரு நடவடிக்கையாக ஜோஹோ தயாரிப்புகளை மாற வேண்டும் என்று உத்தரவிடப்படுகிறது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது மத்திய கல்வித்துறையில் கூகுள் வொர்க் ஸ்பேஸ் (Google Workspace) மற்றும் மைக்ரோசாப்ட் ஆபிஸ் 365 (Microsoft Office 365) ஆகியவற்றை தான் பயன்படுத்துவார்கள். டாக்குமென்ட், ஸ்பிரிட்ஷீட், பிரசென்டேஷன் உள்ளிட்டவற்றுக்கு இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்படியான சூழலில் தான் ஜோஜோவின் ஆபிஸ் சூட் (Zoho Office Suite) சாப்ட்வேரை பயன்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Zoho Office Suite என்பது தமிழ்நாட்டை மையப்படுத்தி செயல்பட்டு வரும் Zoho நிறுவனத்தின் தயாரிப்பாகும். மைக்ரோசாப்ட் ஆபிஸ் மற்றுமு் கூகுள் வொர்க்ஸ்பேஸ் உள்ளிட்டவற்றில் உள்ளது போன்ற சேவையை இது வழங்கி வருகிறது. ஜோஹோ ரைட்டர், ஜோஹோ ஷீட், ஜோஹோ ேஷா, ஜோஹோ வொர்க்டிரவை் உள்பட பல வசதிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஸ் கோயல் உள்ளிட்டவர்கள் ஜோஜோ நிறுவனத்தின் தயாரிப்புகளை பயன்படுத்த தொடங்கி உள்ளனர். அந்த வரிசையில் தற்போது மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானும் தனது கட்டுப்பாட்டில் உள்ள கல்வித்துறையில் ஜோஹோ சாப்ட்வேரை பயன்படுத்தும்படி அறிவுரை வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications