Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாடு முழுக்க பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு வேக்சின்: 2 கோடி கூடுதல் டோஸ்களை ஒதுக்கிய மத்திய அரசு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடு முழுக்க உள்ள பள்ளிஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு வேக்சின் போடுவதற்காக மொத்தம் 2 கோடி டோஸ் கூடுதல் கொரோனா வேக்சின்களை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. மாநில அரசுகளுக்கு இந்த வேக்சின் வழங்கப்பட உள்ளது.

இந்தியாவில் மூன்றாம் அலை இன்னும் சில வாரங்களில் ஏற்படும் என்று மத்திய சுகாதாரத்துறை வல்லுனர் குழு தெரிவித்துள்ளது. இதில் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதோடு தினசரி 6 லட்சம் கேஸ்கள் பதிவாக வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனால் குழந்தைகளுக்கு வேக்சின் போடும் நடவடிக்கைகளில் சுகாதாரத்துறை களமிறங்கி உள்ளது. ஏற்கனவே 12 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வேக்சின் அளிப்பதில் இணைநோய் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று மத்திய அரசின் தேசிய நோய்த்தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழு தெரிவித்துள்ளது.

விநியோகம்

விநியோகம்

சைடஸ் கேடில்லா நிறுவனத்தின் மூன்று டோஸ் கொரோனா வேக்சினுக்கு இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு இயக்குனரகம் அவசர அனுமதி கொடுத்துள்ளது. சைடஸ் கேடில்லா வேக்சினை 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அளிக்க அனுமதி தரப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான விநியோகம் தொடங்கும். இந்த நிலையில்தான் தற்போது செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆசிரியர்கள் மற்றும் பள்ளிகளில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு வேக்சின் போடுவதற்காக மொத்தம் 2 கோடி டோஸ் கூடுதல் வேக்சின்களை மத்திய அரசு ஒதுக்கி உள்ளது.

 எப்போது

எப்போது

ஆகஸ்ட் 27 முதல் 31க்குள் இந்த வேக்சின் மாநிலங்களுக்கு வழங்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மனசுக்கு மண்டாவியா தெரிவித்துள்ளார். இந்தியாவில் 97 லட்சம் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். இவர்கள் முன்கள பணியாளர்களாக அறிவிக்கப்படவில்லை. இதில் தற்போது வரை 50 சதவிகிதம் பேர் வேக்சின் பெற்றுள்ளனர். இந்த நிலையில் தற்போது வழங்கப்படும் வேக்சின் மீதம் உள்ளவர்களுக்கு கொடுக்க உதவும்.

முக்கியம்

முக்கியம்

பள்ளிகள் பல்வேறு மாநிலங்களில் திறக்கப்பட உள்ள நிலையில் இது முக்கியம் என்று நிதி ஆயோக் தலைவர் விகே பால் தெரிவித்துள்ளார். நாடு முழுக்க பல்வேறு மாநிலங்களில் 9 முதல் 12 வாக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுவிட்டன. தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இப்படிப்பட்ட நிலையில்தான் ஆசிரியர்களுக்கு வேக்சின் கொடுப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்தி உள்ளது.

எல்லோருக்கும் வேக்சின்

எல்லோருக்கும் வேக்சின்

பள்ளி ஆசிரியர் தொடங்கி வேன் டிரைவர் வரை மாணவர்களுடன் நெருக்கமாக இருக்கும் எல்லோரும் வேக்சின் போட வேண்டும். குழநதைகளுக்கு தீவிர கொரோனா பாதிப்பு ஏற்படாது. ஆனாலும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். மாணவர்கள் பள்ளிக்கு திரும்புவது முக்கியம். இதனால் ஆசிரியர்களுக்கு வேக்சின் கொடுக்க வேண்டும்.

வேக்சின் விநியோகம்

வேக்சின் விநியோகம்

இது அவர்களின் கல்வியை உறுதி செய்யும், என்று விகே பால் தெரிவித்துள்ளார். அதோடு மாநில அரசுகள் வேக்சினை மாவட்ட அளவில் முறையாக பிரித்து அளிக்க வேண்டும். அதிக வேக்சின் தேவைப்படும் மாவட்டங்கள், மக்கள் தொகை, கொரோனா பரவல் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து வேக்சினை பிரித்து கொடுக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத்துறை மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தி உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+