ஆபத்து! மக்களே உஷார்.. காய்ச்சல், இருமலுக்கான 14 வகை மருந்துகளுக்கு தடை! மத்திய அரசு அதிரடி.. லிஸ்ட்
டெல்லி: இந்தியாவில் காய்ச்சல், இருமல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்து 14 மாத்திரை, மருந்துகளுக்கு மத்திய அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது. இதில் நிமுசுலைட் மற்றும் பாராசிட்டமல் டிஸ்பர்சிபள் மாத்திரையும் உள்ள நிலையில் தடை விதிக்கப்பட்ட மருந்துகளின் பட்டியல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மாத்திரை, மருந்துகள் அனைத்தும் தீவிர ஆய்வுக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. இந்நிலையில் தான் எப்டிசி (FDC or Fixed Dose Combination)எனும் பல பொருட்களில் கலவையில் உருவாகும் மாத்திரை, மருந்துகள் குறித்து மத்திய அரசின் மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் சமீபத்தில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டது.

இந்த ஆய்வின்போது சில மாத்திரை, மருந்துகள் உடல் நலத்துக்கு தீங்கு ஏற்படுத்த வாய்ப்பு இருக்கலாம் என்பதை கண்டுபிடித்தது. இதையடுத்து 14 மாத்திரை, மருந்துகளுக்கு இந்தியாவில் தடை விதிக்க மருந்துகள் தொழில்நுட்ப ஆலோசனை வாரியம் பரிந்துரை செய்தது.
இந்த பரிந்துரையின் அடிப்படையில் பொதுமக்களின் நலன் கருதி 14 வகையான எப்டிசி ரக மருந்துகளை இந்தியாவில் மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதன்மூலம் இந்த மாத்திரை மற்றும் மருந்துகளை இந்தியாவில் உற்பத்தி செய்து விற்பனை செய்ய தடை விதித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி நிபுணர் குழுவின் பரிந்துரையின்படி பொது நலன் கருதி, 1940 மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின் 26A பிரிவின் கீழ் இந்த மருந்துகளின் உற்பத்தி, விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. இந்த குறிப்பிட்ட மருந்துகளை நோயாளிகளின் எந்தவொரு பயன்பாட்டிற்கும் அனுமதி அளிப்பது நியாயமானதாக இருக்காது. எனவே இந்த மருந்துகளின் உற்பத்தி, விற்பனையை தடை செய்யும் வகையில் கட்டுப்படுத்துவது அவசியமானது என்பதோடு பயனுள்ளதாகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிமிசுலைட் மற்றும் பாராசிட்டமால் டிஸ்பர்சிபிள் மாத்திரைகள் உள்பட எந்தெந்த மருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளன என்பது பற்றியும் மத்திய சுகாதார அமைச்சகம் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் உள்ள விபரங்கள் வருமாறு:
1. Salbutamol + Bromhexine
2. Amoxicillin + Bromhexine
3. Pholcodine + Promethazine
4. Nimesulide + Paracetamol dispersible tablets
5. Phenytoin + Phenobarbitone Sodium
6. Salbutamol + Etofylline + Bromhexine
7. Ammonium Chloride + Sodium Citrate + Chlorpheniramine Maleate + Menthol
8. Paracetamol + Bromhexine + Phenylephrine + Chlorpheniramine + Guaiphenesin
9. Chlorpheniramine + Codeine Phosphate + Menthol Syrup
10. Dextromethorphan + Chlorpheniramine + Guaiphenesin + Ammonium Chloride
11. Chlorpheniramine Maleate + Dextromethorphan + Guaiphenesin + Ammonium Chloride + Menthol
12. Chlorpheniramine Maleate + Codeine Syrup
13. Ammonium Chloride + Bromhexine + Dextromethorphan
14. Bromhexine + Dextromethorphan + Ammonium Chloride + Menthol உள்ளிட்ட 14 எப்டிசி மாத்திரை, மருந்துகள் தான் இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவை அனைத்தும் காய்ச்சல் மற்றும் இருமல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கானது. எனவே இனி இந்த மருந்துகளை பயன்படுத்தாமல் மக்கள் உஷாராக இருக்க வேண்டியது அவசியமாகும்.












Click it and Unblock the Notifications