Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Ullu உட்பட.. 25 ஓடிடி தளங்கள், ஆபாச செயலிகள், இணையதளங்களுக்கு தடை.. இதோ லிஸ்ட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆபாச படங்கள் மற்றும் பிற ஆபாசமான உள்ளடக்கங்களை கொண்டுள்ள ஓடிடி தளங்கள், செல்போன் செயலிகள், இணையதளங்கள் என்று மொத்தம் 25 தளங்களை மத்திய அரசு தடை செய்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் இந்த 25 ஆபாச செயலிகள், இணையதளங்களுக்கு அதிரடியாக தடை விதித்து மத்திய தகவல் ஒளிபரப்பு துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: நாட்டில் ஆபாச படம் மற்றும் பிற ஆபாச உள்ளடக்கங்களை கொண்ட ஓடிடி தளங்கள், இணையதளங்கள், ஆபாச செயலிகள் என்று மொத்தம் 25 தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதில் ஆபாசத்தை விளம்பரப்படுத்தும் இணையதளங்கள், செயலிகளும் அடங்கும்.

union-government-blocked-24-apps-and-websites-for-adult-and-vulgar-content-in-india

அதன்படி ALTT, ULLU, Big Shots App, Desiflix, Boomex, Navarasa Lite, Gulab App, Kangan App, Bull App, Jalva App
Wow Entertainment, Look Entertainment உள்ளிட்டவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதவிர Hitprime, Feneo, ShowX, Sol Talkies, Adda TV, HotX VIP, Hulchul App MoodX, NeonX VIP, Fugi, Mojflix, Triflicks உள்ளிட்டவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளங்கள் மற்றும் செயலிகள் நம் நாட்டின் டிஜிட்டல் நெறிமுறைகளை மீறி உள்ளது. நம் நாட்டின் தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000ல் குறிப்பாக பிரிவு 67 மற்றும் 67 ஏ, பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவு 294 மற்றும் பெண்களை அநாகரீகமாக பிரதிநிதித்துவப்படுத்துதல் (தடை) சட்டம், 1986 பிரிவு 4 ஆகியவற்றின் கீழ் இந்த ஓடிடி தளங்கள், இணையதளங்கள் மற்றும் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அனைத்து இணையதள சேவை வழங்குநர்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+