Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"வாக்சின் கொள்கை".. விளாசிய சுப்ரீம் கோர்ட்.. மாநிலங்களும் அதிருப்தி.. இறங்கி வந்த மத்திய அரசு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசின் வேக்சின் கொள்கையை உச்ச நீதிமன்றம் கடுமையாக விமர்சித்து இருந்த நிலையில் தற்போது பிரதமர் மோடி நாடு முழுக்க 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக வேக்சின் கொடுப்பதாக அறிவித்துள்ளார். இனிமேல் மத்திய அரசே தடுப்பூசிகளை வினியோக்கும், முழுமையாக மத்திய அரசே நடத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் வேக்சின் கொள்கையை உச்ச நீதிமன்றம் கடந்த வாரங்களில் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றமே தானாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தது. உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான நீதிபதிகள் எல்.என்.ராவ் மற்றும் எஸ்.ரவீந்திர பட் ஆகிய மூன்று பேர் கொண்ட பெஞ்ச் அமர்வு இந்த வழக்கை விசாரித்து வந்தது.

இதில் மத்திய அரசு தனது வேக்சின் கொள்முதலின் முழு விவரத்தையும் தேதி வாரியாக பிரமாண பத்திரமாக 2 வாரங்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இதில் நீதிபதி டி.ஒய் சந்திரசூட் அமர்வு கடும் கேள்விகளை எழுப்பி இருந்தது.

என்ன சொன்னது

என்ன சொன்னது

அதோடு மத்திய அரசின் வேக்சின் கொள்கை நியாயமற்றது, பகுத்தறிவற்றது. 18-44 வயது கொண்டவர்களுக்கு இலவசமாக வேக்சின் அளிக்காத மத்திய அரசின் கொள்கை தவறானது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு எப்படி வேக்சின் தேவையோ அதேபோல் 18-44 வயது கொண்டவர்களுக்கும் வேக்சின் இலவசமாக தேவை. 18-44 வயது கொண்டவர்களுக்கு வேக்சின் போட கட்டணம் வசூலிக்கும் மத்திய அரசின் திட்டம் நியாயமற்றது, பகுத்தறிவற்றது என்று உச்ச நீதிமன்றம் விமர்சனம் செய்தது.

 தவறு

தவறு

மேலும், மத்திய அரசின் வேக்சினை இலவசமாக அளிக்காத கொள்கை காரணமாக சிலர் வேக்சின் போட்டுக்கொள்ள தனியார் மருத்துவமனைகளிலும், சில மாநிலங்களிலும் காசு கொடுத்து வேக்சின் போடும் நிலை ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு தனது வேக்சின் கொள்கையை மறுசீராய்வு செய்ய வேண்டும், மக்களின் அரசியலமைப்பு உரிமைகளுக்கு எதிரானதாக இந்த கொள்கை உள்ளது, நீதிமன்றம் இதை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது

 மறுபரிசீலனை

மறுபரிசீலனை

மத்திய அரசு தனது வேக்சின் கொள்கை குறித்த புதிய பிராமண பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும். மத்திய அரசின் வேக்சின் பாலிசி குறித்த அனைத்து விவரங்களையும், கோப்புகளையும் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தங்களின் வேக்சின் கொள்கையை மத்திய அரசு மறுசீராய்வு செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டு இருந்தது. இரண்டு வாரங்களில் இந்த அனைத்து விவரங்களும் அடங்கிய பிரமாண பத்திரம் உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மூலம் தாக்கல் செய்யப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டு இருந்தது.

மாற்றம்

மாற்றம்

உச்ச நீதிமன்றம் மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்திருந்த நிலையில், தற்போது மத்திய அரசு தனது வேக்சின் கொள்கையை மாற்றியுள்ளது. பிரதமர் மோடி நாடு முழுக்க 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக வேக்சின் கொடுப்பதாக அறிவித்துள்ளார். இனிமேல் மத்திய அரசே தடுப்பூசிகளை வினியோக்கும், முழுமையாக மத்திய அரசே நடத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம் மத்திய அரசு மீது கடும் நடவடிக்கை எடுக்கும் சூழ்நிலை நிலவிய நிலையில், மத்திய அரசு தனது முடிவை மாற்றி உள்ளது. இனிமேல் மத்திய அரசே தடுப்பூசிகளை வினியோக்கும், முழுமையாக மத்திய அரசே நடத்தும். மாநில அரசுகளுக்கு 25 சதவீத தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்கும். ஜூன் மாதம் முதல் மாநிலங்களுக்கு மத்திய அரசு இலவசமாக தடுப்பூசி வழங்கும். மாநிலங்கள் தங்களது நிதியிலிருந்து தடுப்பூசிக்கு செலவிட தேவையில்லை. தடுப்பூசி பற்றக்குறை நாடு முழுக்க விரைவில் தீர்ந்துவிடும்.

வேக்சின்

வேக்சின்

வேக்சின் விவகாரத்தில் மாநில அரசுகள் பல மத்திய அரசுக்கு இதே கோரிக்கையை வைத்தன. மத்திய அரசே வேக்சின் வாங்கி தர வேண்டும் என்று கோரிக்கைகளை வைத்து வந்தன. கேரள முதல்வர் பினராயி விஜயன்தான் 11 பாஜக ஆளாத மாநிலங்களுக்கு கடிதம் எழுதினார். தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், ஜார்கண்ட், டெல்லி, பஞ்சாப் ஆகிய மாநில முதல்வர்களுக்கு கடிதம் எழுதினார்.

கோரிக்கை

கோரிக்கை

11 மாநில அரசுகள் எல்லாம் ஒன்று சேர்ந்து மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து வேக்சின் வாங்கி அதை மாநிலங்களுக்கு மத்திய அரசு இலவசமாக, முறையாக பங்கீடு செய்ய வேண்டும் என்று முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை வைத்துள்ளார். இதற்கு தமிழ்நாடு அரசு ஆதரவு அளித்துள்ள நிலையில் மற்ற மாநிலங்களும் இதே கோரிக்கையை வைத்து வந்தன. முக்கியமாக வெளிநாடு டெண்டர் கிடைக்காத நிலையில் இதே கோரிக்கையை மாநில அரசுகள் வைத்து வந்தன, தற்போது மத்திய அரசு அந்த கோரிக்கையை ஏற்றுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+