Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இலவச வேக்சின்.. ரொம்ப லேட்.. 1 வருஷத்துக்கு முன்பே செஞ்சிருக்கணும்.. மத்திய அரசுக்கு கடும் விமர்சனம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய அரசே வேக்சின்களை வாங்கி, இலவசமாக மாநில அரசுகளுக்கு கொடுக்கும், வேக்சின் விநியோகத்தை முழுக்க முழுக்க மத்திய அரசு ஏற்கும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இது நல்ல அறிவிப்பு என்றாலும் மிக மிக தாமதமான அறிவிப்பு என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.

Recommended Video

    Corona Vaccineஐ இனி மத்திய அரசே கொள்முதல் செய்யும்: Modi அறிவிப்பு

    பிரதமர் மோடி நாடு முழுக்க 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக வேக்சின் கொடுப்பதாக அறிவித்துள்ளார். இனிமேல் மத்திய அரசே தடுப்பூசிகளை வினியோக்கும், முழுமையாக மத்திய அரசே நடத்தும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    இனிமேல் மத்திய அரசே தடுப்பூசிகளை வினியோக்கும், முழுமையாக மத்திய அரசே நடத்தும். ஜூன் மாதம் முதல் மாநிலங்களுக்கு மத்திய அரசு இலவசமாக தடுப்பூசி வழங்கும். மாநிலங்கள் தங்களது நிதியிலிருந்து தடுப்பூசிக்கு செலவிட தேவையில்லை, என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

    விமர்சனம்

    விமர்சனம்

    இந்த நிலையில் இந்த வேக்சின் கொள்கை மாற்றம் தொடர்பான அறிவிப்பு மிகவும் தாமதமானது என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக காங்கிரஸ் எம்பி சசி தரூர் செய்துள்ள விமர்சனத்தில், பிரதமர் மோடி மிக சரியான முடிவை கடைசியாக எடுத்துள்ளார். பல தவறான முடிவுகளை எடுத்துவிட்டு, இப்போது இந்த முடிவை எடுத்து இருக்கிறார்.

    ஒரு வருடம்

    ஒரு வருடம்

    பல தவறான முன்மாதிரி நடவடிக்கைகளை மேற்கொண்டு விட்டு, தற்போது ஒரு வழியாக பிரதமர் மோடி சரியான நடவடிக்கையை எடுத்துள்ளார். இதை கடந்த ஆண்டே இந்திய அரசு செய்திருந்தால், கடந்த 6 மாதமாக நாம் பட்ட பெரும் சிரமத்தையும், துயரத்தையும் தவிர்த்திருக்க முடியும். அதை விட முக்கியமாக, நமக்கு போக கூடுதல் தடுப்பூசிகளை ஏற்றுமதியும் செய்திருக்கவும் முடியும் என்று கூறியுள்ளார் சசி தரூர்.. காங்கிரஸ் தலைவர் சரேல் பட்டேலும் இதே விமர்சனத்தை வைத்துள்ளார்.

    டிகே சிவக்குமார்

    டிகே சிவக்குமார்

    கர்நாடகா காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் தனது ட்வீட்டில், இது தாமதமான முடிவாக வரவேற்க கூடிய முடிவு. மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து இறங்கி வர வைத்த உச்ச நீதிமன்றத்திற்கு நன்றி. சமமான அளவு வேக்சின் விநியோகத்தில் கர்நாடக அரசு இனி கவனம் செலுத்த வேண்டும் என்று டிகே சிவக்குமார் குறிப்பிட்டுள்ளார்.

    விஜயன்

    விஜயன்

    இந்த நிலையில் மாநில அரசுகளுக்கு இலவசமாக வேக்சின் கொடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், இந்த முடிவை வரவேற்று இருக்கிறார். முக்கியமான நேரத்தில் பிரதமர் மோடி இலவச வேக்சின் வழங்கும் முடிவை எடுத்துள்ளார். எங்களின் கோரிக்கையை பிரதமர் மோடி ஏற்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறியுள்ளார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+