தெலுங்கானா முதல்வர் ரேவந்த ரெட்டி அமெரிக்கா செல்லக்கூடாது.. மத்திய அரசு திடீர் தடை.. பின்னணி

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அமெரிக்கா செல்ல திட்டமிட்டு இருந்தார். இதற்காக அவர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் அனுமதி கோரினார். ஆனால் மத்திய அரசு அனுமதி மறுத்துவிட்டது. ரேவந்த் ரெட்டி அமெரிக்கா பயணத்திற்கு எதற்காக மத்திய அரசிடம் அனுமதி கோரினார்? எதற்காக மத்திய அரசு அனுமதி மறுத்தது? என்பது பற்றிய முக்கிய தகவல்களை இங்கு பார்க்கலாம்.

தெலுங்கானாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக ரேவந்த் ரெட்டி உள்ளார். இந்நிலையில் தான் ரேவந்த் ரெட்டி அமெரிக்காவிற்கு செல்ல முடிவு செய்தார்.

union-government-denies-permission-to-revanth-reddy-for-us-visit

நம் நாட்டை எடுத்து கொண்டால் முதல்வர்கள், மத்திய அமைச்சர்கள், மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அமைச்சர்கள் வெளிநாட்டுக்கு அலுவல் ரீதியாக அல்லது தனிப்பட்ட காரணங்களுக்காக பயணிக்க வேண்டும் என்றால் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் Political Clearance என்ற அனுமதியை பெற வேண்டும்.

அதேபோல் எம்பி, எம்எல்ஏக்கள் நம் நாட்டில் இருந்து செல்லும் தூதுக்குழுவில் இடம்பெற்றிருக்கும் போது அல்லது தூதரக பாஸ்போர்ட்டை பயன்படுத்தும்போது மட்டுமே மத்திய வெளியுறவு துறையின் அனுமதியை பெற வேண்டும். இதனால் ரேவந்த் ரெட்டி தனது அமெரிக்க பயணத்துக்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் அனுமதி கோரியிருந்தார்.

ஆனால் மத்திய அரசு அவருக்கு அனுமதி வழங்கவில்லை. இதனால் ரேவந்த் ரெட்டியால் வெளிநாடு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ரேவந்த் ரெட்டி அமெரிக்கா செல்ல மத்திய வெளியுறவுத்துறை அனுமதி வழங்காதது ஏன்? என்று கேள்வி எழுந்துள்ளது. இதுபற்றி மத்திய வெளியுறவுத்துறையின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வாலிடம் இன்று வினா எழுப்பப்பட்டது. அதற்கு ரந்தீர் ஜெய்ஸ்வால் விளக்கம் அளித்துள்ளார்.

இதுபற்றி ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறுகையில், ''முதல்வர்கள் மற்றும் பிற முக்கிய அரசியல் பிரமுகர்கள் வெளிநாடு செல்ல வேண்டும் என்றால அரசியல் ரீதியிலான அனுமதியை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அளித்த வருகிறது. இதற்காக அனுமதி கோரப்படும் அந்த நிகழ்ச்சி, அனுமதி கேட்கும் நபர்களின் பதவி, பயணத்தின் நோக்கம் உள்ளிட்டவை கருத்தில் கொள்ளப்படும்.

இவை அனைத்தும் சரியாக இருந்தால் அனுமதி வழங்கப்படும். குறிப்பாக நீங்க கேட்ட விஷயத்தில் அப்படியான சூழல் இல்லை. இதனால் அனுமதி மறுக்கப்பட்டது. அதேவேளையில் ரேவந்த் ரெட்டி பிரிட்டன் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது'' என்றார்.

தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பிரிட்டன் தலைநகர் லண்டன் மற்றும் போஸ்டன் நகருக்கும், அதன்பிறகு அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கும் பயணம் செய்ய திட்டமிட்டு இருந்தார். அங்குள்ள கல்வி, திறன், டெக்னாலஜி பற்றி அறிந்து கொள்ளவும், அதனை தெலுங்கானாவில் செயல்படுத்துவது தொடர்பாக முன்னணி கல்வி நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் மேற்கொள்ளவும் அவர் திட்டமிட்டு இருந்தார். தற்போது பிரிட்டன் செல்ல அனுமதித்துள்ள மத்திய அரசு அமெரிக்கா செல்ல தடை போட்டுள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+