கோவாக்சின், கோவிஷீல்ட் வேக்சின்களின் கொள்முதல் விலையை உயர்த்திய மத்திய அரசு.. கூடுதல் செலவு!
டெல்லி: கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய வேக்சின்களுக்கான கொள்முதல் விலையை மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இது மத்திய அரசுக்கு கூடுதல் நிதி சுமையை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக வேக்சின் கொடுப்பதாகவும், இனிமேல் மத்திய அரசே தடுப்பூசிகளை வினியோகிக்கும், முழுமையாக மத்திய அரசே நடத்தும் என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து கடந்த ஒன்றரை மாதங்களாக மத்திய அரசே இலவசமாக மாநிலங்களுக்கு வேக்சின் ஒதுக்கீடு செய்து வருகிறது.
சீரம் இன்ஸ்டிடியூட் மற்றும் பாரத் பயோடெக் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து வேக்சின் வாங்கி அதை இலவசமாக அரசு விநியோகம் செய்து வருகிறது.

எவ்வளவு
கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் இரண்டும் 150 ரூபாய் + 5 சதவிகிதம் ஜிஎஸ்டி என்ற விலையில் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது இந்த வேக்சின் கொள்முதல் விலை உயர்த்தப்ப்பட்டுள்ளது. இரண்டு நிறுவனங்களுக்கும் மத்திய அரசு கொடுக்கும் விலை கட்டுப்படியாகவில்லை என்பதால் கொள்முதல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய விலையை
புதிய விலையின்படி கோவிஷீல்ட் 205 ரூபாய் + 5 சதவிகிதம் ஜிஎஸ்டி என்ற விலையில் கொள்முதல் செய்யப்படும். அதேபோல் கோவாக்சின் 215 ரூபாய் + 5 சதவிகிதம் ஜிஎஸ்டி என்ற விலையில் கொள்முதல் செய்யப்படும். இது மத்திய அரசுக்கு கூடுதல் நிதி சுமையை கொடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

நிதி சுமை
மத்திய அரசு கூடுதல் விலைக்கு வேக்சின் வாங்கினாலும் எப்போதும் போல மாநிலங்களுக்கு இலவசமாகவே வேக்சின் விற்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தனியாருக்கு விற்கப்படும் வேக்சின் விலையில் மாற்றம் கிடையாது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் வேக்சினில் 25% வேக்சினை தனியார் வாங்கிக்கொள்ள அனுமதி வழங்கபப்ட்டுள்ளது.

சர்வீஸ்
தனியார் மருத்துவமனைகளில் எப்போதும் போல கோவிட்ஷீல்ட் ரூ. 780 (உற்பத்தியாளர் விலை 600+ ஜிஎஸ்டி 30+ சர்வீஸ் சார்ஜ் 150ரூபாய் ஆகும்), கோவாக்சின் ரூ. 1410 (உற்பத்தியாளர் விலை 1200 + ஜிஎஸ்டி 60+ சர்வீஸ் சார்ஜ் 150ரூபாய் ஆகும்) , ஸ்புட்னிக் வி ரூ. 1145 (உற்பத்தியாளர் விலை 948+ ஜிஎஸ்டி 47.40-47+ சர்வீஸ் சார்ஜ் 150 ரூபாய் ஆகும்) ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.
Recommended Video

எத்தனை
இந்தியாவில் இதுவரை 40,02,33,360 பேருக்கு வேக்சின் போடப்பட்டுள்ளது. 31,86,33,772 பேருக்கு ஒரு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது.8,15,99,588 பேருக்கு இரண்டு டோஸ் வேக்சின் போடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications