தமிழகத்துக்கு ரூ.7,057 கோடி.. மாநில அரசுக்கான வரிப்பகிர்வை வழங்கிய மத்திய அரசு.. உபிக்கு தாராளம்
டெல்லி: வரி வருவாயில் இருந்து மாநில அரசுகளுக்கான வரிப் பகிர்வாக ரூ.1,73,030 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதன்படி அதிகபட்சமாக உத்தர பிரதேசத்துக்கு ரூ.31,039.84 கோடியும், தமிழ்நாட்டுக்கு ரூ.7,057.89 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றிய முழு விபரங்கள் வருமாறு:
வரி வருவாயில் இருந்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு சார்பில் வரிப்பகிர்வு என்பது வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் மாநில அரசுகளின் மூலதன செலவினங்களை விரைவுப்படுத்தவும், அரசு திட்டங்களுக்கு தேவையான நிதி தேவையையும் இந்த வரிப்பகிர்வு மூலம் பூர்த்தி செய்ய முடியும்.

அந்த வகையில் இன்று மத்திய அரசு சார்பில் வரி வருவாயில் இருந்து மாநில அரசுகளுக்கான வரிப்பகிர்வு தொகை என்பது விடுவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
மூலதனச் செலவினங்களை விரைவாக மேற்கொள்ளவும், வளர்ச்சி திட்டங்களுக்கு உதவிடவும் மாநில அரசுகளுக்கு வரி பகிர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி மாநில அரசுகளுக்கு ரூ.1,73,030 கோடி வரிப்பகிர்வாக வழங்கப்படுகிறது. கடந்த 2024ம் ஆண்டு டிசம்பரில் ரூ89,086 கோடியாக இருந்த இந்த வரிப்பகிர்வு என்பது இந்த மாதம் ரூ.1,73,030 கோடியாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி மாநிலங்கள் வாரியாக வழங்கப்பட்டுள்ள வரி பகிர்வு விபரம் வருமாறு:
ஆந்திர பிரதேசத்துக்கு ரூ. 7002.52 கோடி, அருணாச்சல பிரதேசத்துக்கு ரூ.3040.14 கோடி, அசாமுக்கு ரூ. 5412.38 கோடி, பீகாருக்கு ரூ.17403.36 கோடி, சத்தீஸ்கருக்கு ரூ. 5895.13 கோடி, கோவாவிற்கு ரூ. 667.91 கோடி, குஜராத்துக்கு ரூ. 6017.99 கோடி, ஹரியானாவுக்கு ரூ.1891.22 கோடி, இமாச்சல பிரதேசத்துக்கு ரூ.1436.16 கோடி, ஜார்கண்ட்டுக்கு ரூ. 5722.10 கோடி வரிப்பகிர்வாக வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவுக்கு ரூ.6310.40 கோடி, கேரளாவுக்கு ரூ.3330.83 கோடி, மத்திய பிரதேசத்துக்கு ரூ.13582.86 கோடி, மகாராஷ்டிராவுக்கு ரூ.
10930.31 கோடி, மணிப்பூருக்கு ரூ. 1238.90 கோடி, மேகலாயாவுக்கு ரூ. 1327.13 கோடி, மிசோராமுக்கு ரூ.865.15 கோடி, நாகலாந்துக்கு ரூ. 984.54, ஒடிசாவுக்கு ரூ.7834.80 கோடி, பஞ்சாப்புக்கு ரூ. 3126.65 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்துக்கு ரூ.10426.78 கோடி, சிக்கிமிற்கு ரூ.671.35 கோடி, தமிழ்நாட்டுக்கு ரூ.7057.89 கோடி, தெலுங்கானாவுக்கு ரூ.
3637.09 கோடி, திரிபுராவுக்கு ரூ. 1225.04, உத்தர பிரதேசத்துக்கு ரூ.31039.84 கோடி, உத்தரகாண்ட்டுக்கு ரூ. 1934.47 கோடி, மேற்கு வங்கத்துக்கு ரூ. 13017.06 கோடி என்று ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
-
கரப்பான் பூச்சி கட்சிக்கு தாவும் Gen-Z! ஏமாந்துவிடக்கூடாதாம்.. உஷார் சொல்லும் வீரமணி! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications