இந்தியா - சீனா எல்லையில் மீண்டும் மோதலா? அதிகாரி சொன்னதை உறுதி செய்த மத்திய வெளியுறவுத்துறை .. என்ன பிரச்சனை?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியா - சீனா இடையே மீண்டும் எல்லையில் மோதல் உருவாகி உள்ளதாக இந்திய - திபெத் எல்லை பாதுகாப்பு படை பிரிவின் தலைமை இயக்குநர் சத்ருஜீத் கபூர் நேற்று கூறினார். இது சர்ச்சையை கிளப்பிய நிலையில் இன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அந்த மோதலை ஒப்புக்கொண்டு அதன் பின்னணி பற்றி விளக்கம் அளித்துள்ளது.

union-government-says-chinas-partrolling-patterns-could-distrub-the-situationalong-the-lac-after-it

அருணாச்சல பிரேதசம் நம் நாட்டின் ஒரு பகுதியாகும். ஆனால் அருணாச்சல பிரதேசத்திற்கு சீனா உரிமை கொண்டாடி வருகிறது. அருணாச்சல பிரதேசத்தை சீனா தனது நாட்டுடன் இணைத்து புதிய பெயர் வைத்து வம்பிழுப்பதையும் வாடிக்கையாக வைத்துள்ளது.

இந்நிலையில் தான் அருணாச்சல பிரதேசத்தில் இந்தியா - சீனா எல்லையில் பல இடங்களில் இருநாட்டு வீரர்கள் இடையே மோதல் ஏற்படுவதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியானது.

இதனை கூறியது இந்திய-திபெத் எல்லைக் காவல் படையின் (ITBP) தலைமை இயக்குநர் சத்ருஜீத் கபூர் தான். இவரது தலைமையில் தான் இந்திய - திபெத் எல்லை காவல் படையினர் அருணாச்சல பிரதேசத்தில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தான் ராஜஸ்தான் மாநிலம் ஆல்வாரில் சத்ருஜீத் கபூர் பேசுகையில், ''கடந்த சில மாதங்களாக இந்தியா - சீனா வீரர்கள் இடையே எல்லையில் மோதல் ஏற்பட்டு வருகிறது. எல்லையின் அனைத்து பிரிவுகளிலும் 'ட்ரோன் பிளாட்டூன்கள்' உருவாக்கப்பட்டுள்ளது. கல்வான் பள்ளத்தாக்கு மோதல் போன்ற சூழலை சமாளிக்க புதிய பயிற்சி வீரர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளது'' என கூறியிருந்தார்.

இந்த அதிகாரியின் பேச்சு அதிக கவனம் பெற்றது. இந்தியா - சீனா இடையே மோதல் இல்லை என்று மத்திய அரசு கூறி வரும் நிலையில் அதற்கு முரண்பாடாக அதிகாரியின் கருத்து உள்ளது. இதற்கு பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் போர்க்கொடி உயர்த்தினர்.

இநு்நிலையில் தான் இந்தியா - சீனா எல்லையில் மோதல் உண்மை தான் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உறுதி செய்துள்ளது. மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளராக ரந்தீர் ஜெய்ஸ்வால் 2 வாரங்களுக்கு ஒருமுறை பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடத்தி வருகிறார். அந்த வகையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் இந்தியா - சீனா எல்லை மோதல் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது:

''நாங்கள் முன்பே குறிப்பிட்டது போல, சீன படைகள் தங்களின் வழக்கமான ரோந்து பணிகளில் இருந்து விலகி செல்லும்போது இந்தியா - சீனா எல்லை பகுதிகளில் அமைதிக்கு பங்கம் ஏற்படுகிறது. இருதரப்பு உறவுகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு எல்லை பகுதியில் அமைதி நிலவுவது மிகவும் அவசியம்.

எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நிலவும் சிக்கல்களை தீர்க்கவும், தவறான புரிதல்கள் அல்லது தவறான கணக்கீடுகளை தவிர்க்கவும், இரு தரப்பினரும் ஏற்கனவே நடைமுறையில் உள்ள தூதரக மற்றும் ராணுவ வழிமுறைகளைப் தொடர்ந்து பயன்படுத்துவார்கள். இருநாடுகள் இடையே எல்லை கட்டுப்பாடு கோடு பற்றிய புரிதலை மேம்படுத்துவது பற்றி விவாதிக்க இருநாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளது '' என்று கூறினார்.

இதன்மூலம் அவ்வப்போது இந்தியா - சீனா எல்லையில் குழப்பம் ஏற்பட்டு மோதல் ஏற்படுகிறது என்று கூறிய இந்திய - திபெத் எல்லை காவல் படையினர் தலைமை இயக்குநர் சத்ருஜீத் கபூரின் கருத்து உண்மை தான் என்பதை உறுதி செய்துள்ளது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+