தனியார்மயமாகும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி? லாபம் ஈட்டியும் தப்பவில்லை.. மத்திய அரசு திட்டம்
டெல்லி: பொதுத்துறை வங்கிகளான இந்தியன் ஓவர்சீஸ் மற்றும் சென்ட்ரல் வங்கி ஆகியவற்றை தனியார்மயாக்கும் பணிகளை துரிதப்படுத்தும் பணியில் மத்திய அரசு இறங்கியுள்ளது.
பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் விற்று வரும் மத்திய அரசு பல்வேறு சிறிய வங்கிகளையும், நஷ்டத்தில் இயங்கும் வங்கிகளையும் பெரிய வங்கிகளோடு இணைத்தது.
வங்கி ஊழியர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த நடவடிக்களை மேற்கொண்ட அரசு, பொதுத்துறை வங்கிகளான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் சென்ட்ரல் வங்கிகளை தனியாரிடம் விற்க முடிவு செய்து அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது.

நிதி ஆயோக் பரிந்துரை
மத்திய அரசின் நிதி ஆயோக் நிறுவனம் 2 வங்கிகளை தனியார்மயமாக்குவது தொடர்பான பரிந்துரையை ஏற்கனவே சி.ஜி.டி, எனப்படும் அரசு முதலீடுகளை விற்பதற்கான செயலாளர்களிடன் முக்கிய குழுவிடம் பரிந்துரைத்து இருக்கிறது. தற்போது அதற்கான பணிகளை மத்திய அரசு துரிதப்படுத்தி இருக்கிறது.

வங்கி ஊழியர் போராட்டங்களால் தாமதம்
2 வங்கிகளும் முதல் காலாண்டு முடிவுகளை வெளியிட்ட பின் தனியார்மயமாக்கும் பணிகள் துரிதப்படுத்தப்படும் என மத்திய நிதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வங்கி ஊழியர்களின் கடும் எதிர்ப்பு காரணமாகவும், வங்கி ஊழியர்களின் தொடர் போராட்டங்களாலும், மாநில தேர்தல் காரணமாகவும் வங்கிகளை தனியார்மயமாக்கும் பணிகளை சில காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.

மத்திய அமைச்சரவை ஒப்புதலுக்கு அனுப்ப முடிவு
ஆனால், டிசம்பர் காலாண்டில் சாதகமான முடிவுகள் வந்திருப்பதால் சி.ஜி.டி. குழு நிதி ஆயோக்கின் பரிந்துரை குறித்து ஆலோசித்து வருகிறது. அந்த குழு இறுது முடிவெடுத்து மத்திய அமைச்சரைவையின் இறுதி ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கும். அதே நேரம் வங்கிகளை தனியார் மயமாக்குவது தொடர்பாக வங்கிகளை தேசியமாக்கும் சட்டத்தில் எந்தவிதமான விதிகளும் இல்லை என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

சட்டத்திருத்தம் தேவை
எனவே அரசுக்கு சொந்தமான வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கு வங்கிகளை தேசியமயமாக்கும் சட்டத்தில் திருத்தம் தேவைப்படுகிறது. ஏற்கனவே வங்கி ஒழுங்குமுறை சட்டம் மற்றும் வங்கி தேசியமயமாக்கல் சட்டம் ஆகியவற்றில் தனியமயமாக்கலை எளிதாக்கும் வகையில் திருத்தங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. இவ்வாறு வங்கிகளை தனியார்மயமாக்குவதை எதிர்த்து ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர்க்க வங்கி ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவிக்க வங்கி நிர்வாகங்கள் முடிவு செய்து இருக்கின்றன.

லாபத்தை ஈட்டும் ஓவர்சீஸ், சென்ட்ரல் வங்கிகள்
சென்னையை தலைமையிடமாக கொண்டுள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மொத்த லாபம் அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில் இரட்டிப்பாகி ரூ.454 ஆக உள்ளது. கடந்த முறை இதே காலாண்டில் அந்த வங்கியின் லாபம் ரூ.213 கோடியாக இருந்தது. மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சென்ட்ரல் வங்கியின் மொத்த லாபம் ரூ.279 கோடியாக உள்ளது. இதன் வளர்ச்சி 69% ஆக இருக்கிறது.
இந்த 2 வங்கிகளை தனியார்மயமாக்கிய பிறகு மற்ற பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதற்கு மத்திய அரசு அடையாளம் காண உள்ளது. இந்தியாவில் 4 பொதுத்துறை வங்கிகள் மட்டும் போதும் என்பது மத்திய அரசின் திட்டம்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications