நிதிப் பகிர்வில் மாநிலங்களை மத்திய அரசு வஞ்சித்தால் இந்தியாவின் ஒருமைப்பாடு? லோக்சபாவில் ரவிக்குமார்
டெல்லி: நிதிப் பகிர்வில் நாட்டின் மாநிலங்களை மத்திய அரசு வஞ்சித்தால் இந்தியாவின் ஒருமைப்பாடு கேள்விக்குறியாகும் என்று லோக்சபாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் எம்பி எச்சரித்துள்ளார். மேலும் மாநிலங்களை வஞ்சித்தால் அதனால் பாதிக்கப்படுகிற மக்கள் கிளர்ந்து எழுந்தால் அதன் பிறகு இந்தியாவின் ஒற்றுமை, இந்தியாவின் ஒருமைப்பாடு ஆபத்துக்குள்ளாகும் எனவும் ரவிக்குமார் எம்பி எச்சரிக்கை விடுத்தார்.
லோக்சபாவில் ரவிக்குமார் எம்பி பேசியதாவது: மாநிலங்களுக்கு நிதியைப் பகிரும் போது எவ்வளவு சதவீதம் பகிர வேண்டும் என்பதை நிதி ஆணையம் முடிவு செய்கிறது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதியைப் பகிர்கிறது.

ரூ1.2 லட்சம் கோடி: இந்த 15 ஆவது நிதி ஆணைய காலத்தில் மட்டும் 1.2 லட்சம் கோடி ரூபாய் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்காமல் மத்திய அரசால் ஏமாற்றப்பட்டு இருக்கிறது. இப்படி குறைவாகப் பகிர்ந்தளிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும். இந்த 15 ஆவது நிதி ஆணைய காலத்தில் பகிரப்படாமல் எஞ்சி இருக்கும் அந்த 1.2 லட்சம் கோடி ரூபாயையும் எஞ்சியுள்ள காலத்துக்குள் மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்க வேண்டும்.
செஸ் , சர்ச்சார்ஜ் எங்கே போனது?: மாநிலங்களுக்கு வரி வருவாயைப் பகிரும் போது அதில் செஸ் , சர்ச்சார்ஜ் ஆகியவற்றை சேர்ப்பதில்லை. செஸ், சர்சார்ஜ் என ஏராளமான தொகையை மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் வசூலிக்கிறது. அதிலும் பாஜக ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு இந்த செஸ், சர்ச் சார்ஜ் மூலம் வசூலிக்கப்படும் தொகை கூடிக் கொண்டே போகிறது. 2014 -15 இல் 1.19 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டது. தற்போது 2023- 24 இல் 5.10 லட்சம் கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டு இருக்கிறது. இதில் மாநிலங்களுக்கு எதுவுமே கொடுப்பதில்லை. அடுத்து 16 வது நிதி ஆணையக்காலம் துவங்கவிருக்கிறது. மாநிலங்களுக்கு நிதி பகிர்வு தொடர்பாக முடிவெடுக்கும் போது செஸ், சர்ச் சார்ஜ் ஆகியவற்றிலும் மாநிலங்களுக்குப் பங்கு வழங்க வேண்டும் என்று அதில் முடிவு எடுக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்.
ஒருமைப்பாடு கேள்விக்குறியாகும்: மாநிலங்களுக்கு உரிய அளவில் நிதியைக் கொடுத்தால்தான் அவை நிம்மதியாக செயல்பட முடியும். கடந்த ஜூலை 25ஆம் தேதி உச்ச நீதிமன்றம் மினரல் ஏரியா டெவலப்மெண்ட் அதாரிட்டி மற்றும் பிறர் என்ற வழக்கில் மிக முக்கியமான ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. நிதி கூட்டாட்சி Fiscal Federalism என்பது பாதுகாக்கப்பட வேண்டும் என்று விரிவாக உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறது. அதை மத்திய அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். நிதி கூட்டாட்சி காப்பாற்றப்பட்டால்தான் இந்தியாவின் ஒருமைப்பாடு பாதுகாக்கப்படும். தொடர்ந்து மாநிலங்களை வஞ்சித்தால் அதனால் பாதிக்கப்படுகிற மக்கள் கிளர்ந்து எழுந்தால் அதன் பிறகு இந்தியாவின் ஒற்றுமை, இந்தியாவின் ஒருமைப்பாடு ஆபத்துக்குள்ளாகும் என்பதை நான் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். எனவே நிதி கூட்டாட்சியைப் பாதுகாப்பதில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் தடுப்பூசி: இந்த நிதிநிலை அறிக்கையில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்கான தடுப்பூசித் திட்டம் குறித்த அறிவிப்பு வரும் என்று எதிர்பார்த்தேன். உலகிலேயே இந்த புற்றுநோயால் அதிகமான பெண்கள் உயிரிழப்பது இந்தியாவில் தான். ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சம் பேர் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். கடந்த 17 ஆவது நாடாளுமன்றத்தில் இது குறித்து நான் கேள்வி எழுப்பி அந்த விவரங்களை பதிலாகப் பெற்றிருக்கிறேன். முன்பு இதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்படவில்லை, இப்போது இதற்காக தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அது இந்தியாவிலேயே கோவிட் தடுப்பூசியை உற்பத்தி செய்த அதே பூனாவாலா அவர்களுடைய நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்படுகிறது. அந்தத் தடுப்பூசியை நம்முடைய இலவச தடுப்பூசி திட்டத்தின் கீழ் சேர்க்க வேண்டும் என்று நான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். இடைக்கால பட்ஜெட்டில் அது குறித்து சொல்லப்பட்டிருந்தது, அதை பரிசீலிப்போம் என்று கூறியிருந்தார்கள். ஆனால் இந்த பட்ஜெட்டில் அதைப் பற்றி எதுவுமே சொல்லப்படவில்லை. இந்த ஹெச்பிவி தடுப்பு ஊசியை இலவசத் தடுப்பூசித் திட்டத்தில் சேர்த்து இந்த புற்றுநோயால் பெண்கள் உயிரிழக்காமல் தடுக்க வேண்டும் என்று நான் ஒன்றிய அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
ஜூவல்லரி பார்க்: நம்முடைய நிதி அமைச்சர், ஆரம்பக் கல்வி பெற்றது என்னுடைய தொகுதியான விழுப்புரத்தில் தான். அதனால் அந்தத் தொகுதி மீது அவருக்கு மிகுந்த அன்பு உண்டு. 2019 ஆம் ஆண்டு அவரை சந்தித்து நான் கோரிக்கை வைத்தேன். விழுப்புரத்தில் நகை செய்யும் தொழிலாளிகள் ஏராளமாக இருக்கிறார்கள், அவர்களுக்காக ஜுவல்லரி பார்க் ஒன்றை அமைத்துத் தர வேண்டும் என்று கேட்டேன். நிச்சயம் செய்கிறேன் என்று வாக்குறுதி அளித்தார். கடந்த ஐந்து ஆண்டுகளில் அது நிறைவேற்றப்படவில்லை. இப்போதாவது அதை பரிசீலித்து விழுப்புரத்தில் ஜுவல்லரி பார்க் ஒன்றை அமைத்து தர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு ரவிக்குமார் எம்பி பேசினார்.
-
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
விசிகவின் ராஜ்ய சபா சீட் கோரிக்கை.. ஸ்டாலின் சொன்னது என்ன? திருமாவளவன் கொடுத்த விளக்கம் -
6 + 2.. திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.. திருமா மனதை கரைத்த ஸ்டாலின் -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்!












Click it and Unblock the Notifications