டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமித்ஷா தலைமையில் அவசர அவசரமாக கூட்டம்.. காஷ்மீர் குறித்து முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு!

காஷ்மீரில் தற்போது பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் டெல்லியில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: காஷ்மீரில் தற்போது பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் டெல்லியில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

ஜம்மு காஷ்மீரில் தற்போது ராணுவ குவிப்பு காரணமாக பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.லோக்சபா தேர்தல் முடிந்த போது காஷ்மீர் எல்லையில் 40,000 துணை ராணுவ படையினர் நிறுத்தப்பட்டனர். அதன்பின் கூடுதலாக 38 ஆயிரம் வீரர்கள் மீண்டும் குவிக்கப்பட்டார்கள்.

Union Home Minister Amit Shah holds an urgent meeting to discuss on Kashmir

அங்கு அமர்நாத் யாத்திரையை தற்போது மத்திய அரசு தடை செய்துள்ளது. அதேபோல் ஏற்கனவே அங்கு யாத்திரை சென்று இருக்கும் பக்தர்களையும் வெளியேற அறிவுறுத்தி உள்ளது.

காஷ்மீரில் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் தற்போது அமித்ஷா தலைமையில் டெல்லியில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது. உயர்மட்ட பாதுகாப்பு ஆலோசனை குழு இந்த கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உள்துறை செயலர் ராஜீவ், மூத்த அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

அதேபோல், முன்னாள் இந்நாள் ராணுவ அதிகாரிகள் இதில் கலந்து கொண்டு இருகிறார்கள். காஷ்மீர் பிரச்சனை இதில் தீவிரமாக குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த ஆலோசனை கூட்டம் முடிந்த பின் முக்கியமான அறிவிப்புகள் வெளியாகி வாய்ப்புள்ளதாக செய்திகள் வருகிறது.

அதே சமயம் தற்போது காஷ்மீரில் திடீர் என்று அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு வருகிறார்கள். இது போக இன்று மாலை பாஜக பொதுச்செயலாளர்கள் கூட்டம் நடக்க உள்ளது. பாஜக தேசிய செயற்தலைவர் ஜே பி நட்டா இந்த கூட்டத்தை நடத்த உள்ளார்.

மேலும் நாளை காலை பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்திற்கு பின் முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

English summary
A meeting is underway between Union Home Minister Amit Shah, Home Secretary Rajiv Gauba and National Security Advisor Ajit Doval, at the Parliament.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X