அமைச்சரவை கூட்டத்தை விடுங்க.. அதற்கு முன்பே பெரிய முடிவு எடுக்க திட்டம்.. காஷ்மீரில் அமித் ஷா வேகம்
காஷ்மீர் விஷயம் தொடர்பாக நடக்க உள்ள அமைச்சரவை கூட்டத்திற்கு முன்பாகவே காஷ்மீர் பிரச்சனையில் முக்கிய முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
Recommended Video
டெல்லி: காஷ்மீர் விஷயம் தொடர்பாக நடக்க உள்ள அமைச்சரவை கூட்டத்திற்கு முன்பாகவே காஷ்மீர் பிரச்சனையில் முக்கிய முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதற்கான பாதுகாப்பு அமைச்சகத்தின் கூட்டம் நடக்க உள்ளது.
காஷ்மீர் மொத்தமும் தற்போது ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு என்ன நடக்கும் என்பது மாநிலத்தில் முன்னாள் முதல்வர்களுக்கே தெரியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் தற்போது ராணுவ குவிப்பு காரணமாக பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

கடந்த மே மாதம் லோக்சபா தேர்தல் முடிந்த போது காஷ்மீர் எல்லையில் 40,000 துணை ராணுவ படையினர் நிறுத்தப்பட்டனர். அதன்பின் கூடுதலாக 38 ஆயிரம் வீரர்கள் மீண்டும் குவிக்கப்பட்டார்கள். இதனால் அங்கு 80 ஆயிரம் படை வீரர்கள் வரை புதிதாக குவிக்கப்பட்டுள்ளனர்.
காஷ்மீரில் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இன்று காலை நடக்கும் கூட்டத்தில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி அமைச்சர்கள் எல்லோரும் கலந்து கொள்கிறார்கள்.
இதில் காஷ்மீர் பிரச்சனை குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் அதற்கு முன்பாகவே காஷ்மீர் பிரச்சனையில் முக்கிய அதிரடி நடவடிக்கைகளை பாஜக அரசு எடுக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. ஆம், அமைச்சரவை கூட்டத்திற்கு முன்பாகவே காஷ்மீர் குறித்த முக்கிய அறிவிப்பே வெளியாகலாம் என்கிறார்கள்.
இதற்காக தற்போது உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் டெல்லியில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. அமைச்சரவை கூட்டத்திற்கு முன்பாக இது நடக்கும். உயர்மட்ட பாதுகாப்பு ஆலோசனை குழு இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள இருக்கிறது. தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், உள்துறை செயலர் ராஜீவ், மூத்த அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக இவர்கள் நேற்றே ஆலோசனை செய்தனர். 20 மணி நேரத்தில் இவர்கள் மீண்டும் இன்று ஆலோசனை செய்ய இருக்கிறார்கள். அதனால் இன்றே அமித் ஷா தலைமையில் மிக முக்கியமான முடிவு எடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வருகிறது.












Click it and Unblock the Notifications