CBI-ன் புதிய வெப்சைட்- இண்டர்போல் அமைப்புடன் இணைந்து செயல்பட மத்திய அரசின் 'பாரத்போல் தொடக்கம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மத்திய புலனாய்வுத் துறையான CBI உருவாக்கி இருக்கும் பாரத்போல் என்ற இணையதளத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று டெல்லியில் தொடங்கி வைத்தார். நாட்டின் பல்வேறு புலனாய்வு அமைப்புகளை ஒருங்கிணைக்கும் பாரத்போல் அமைப்பான சர்வதேச புலனாய்வு ஏஜென்சிகளுடன் இணைந்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சரும், கூட்டுறவு அமைச்சருமான திரு அமித் ஷா டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) உருவாக்கியுள்ள பாரத்போல் இணையதளத்தை தொடங்கி வைத்தார்.

amit shah bharatpol

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், நாட்டின் சட்ட அமலாக்க அமைப்புகளை வலுப்படுத்த மத்திய அரசு பல முக்கிய முன்முயற்சிகளை எடுத்துள்ளது. பாரத்போல் இணையதளம் குறிப்பிடத்தக்க வகையில் இந்திய சட்ட அமலாக்க ஏஜென்சிகள், சர்வதேச காவல் துறை உதவியை விரைவாக நாடுவதற்கு உதவுகிறது.

இந்தியாவில் சர்வதேச காவல் துறையின் தேசிய பணியகமாக உள்ள சிபிஐ அமைப்பானது சட்ட அமலாக்க ஏஜென்சிகள், உட்பட நாடு முழுவதும் உள்ள பல்வேறு புலனாய்வு ஏஜென்சிகளுடன் இணைந்து குற்றவியல் தொடர்பான விஷயங்களில் சர்வதேச புலனாய்வு அமைப்புடன் ஒத்துழைக்க இந்த இணையதளம் உதவுகிறது.

மத்திய, மாநில, யூனியன் பிரதேச அரசுகள், இந்த ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளின் மூலம் சர்வதேச காவல் துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ள உதவுகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+