இந்திய குடியுரிமை வேண்டாம்! 2011 முதல் கைவிட்ட 16 லட்சம் பேர்! 2022ல் 2 லட்சம்! “டபுள்” ஆன எண்ணிக்கை
2011 முதல் 2022 ஆம் ஆண்டு வரை 16.65 லட்சம் பேர் இந்திய குடியரிமையை கைவிட்டதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
டெல்லி: கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை 16 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இந்திய குடியரிமையை கைவிட்டதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்ற மாநிலங்களவையில் தெரிவித்து இருக்கிறார். கடந்த 2022 ஆம் ஆண்டில் மட்டும் 2 லட்சத்து 25 ஆயிரம் பேர் இந்த குடியுரிமையை கைவிட்டு இருக்கிறார்கள்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இந்திய குடியுரிமையை கைவிட்டவர்கள் எண்ணிக்கை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் பதிலளித்து இருக்கிறார்.
அதில், கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை 16,63,440 பேர் இந்திய குடியுரிமையை துறந்து இருப்பதாக அவர் கூறியுள்ளார். அத்துடன் அவர்கள் எந்தெந்த நாடுகளுக்கு குடியுரிமை மாறுதலாகி உள்ளனர் என்ற விளக்கத்தையும் வழங்கியுள்ளார்.

2011 - 2014
அதன்படி, 2015 ஆம் ஆண்டுக்கு முந்தைய தரவுகளை எடுத்துக் கொண்டால், 2011 ஆம் ஆண்டில் 1,22,819 பேர் இந்திய குடியுரிமையை துறந்து உள்ளார்கள். 2021 ஆம் ஆண்டில் 1,20,923 பேரும், 2013 ஆம் ஆண்டில் 1,31,405 பேரும் தங்கள் குடியுரிமையை துறந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 2014 ஆம் ஆண்டில் சற்று குறைந்து 1,29,328 இந்தியர்கள் குடியுரிமையை துறந்து உள்ளார்கள்.

2015 - 2019
கடந்த 2015 ஆம் ஆண்டில் மட்டும் 1,31,489 பேர் இந்திய குடியுரிமையை கைவிட்டு உள்ளனர். 2016 ஆம் ஆண்டில் 1,41,603 பேரும், 2017 ஆம் ஆண்டில் 1,33,049 பேரும் குடியுரிமையை துறந்து இருக்கிறார்கள். அதேபோல் 2018 ஆம் ஆண்டில் 1,34,561 ஆக இருந்த இந்த எண்ணிக்கை 2019 ஆம் ஆண்டில் 1,44,017 ஆக அதிகரித்து இருக்கிறது.

2020ல் குறைவு
அடுத்து 2020 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை கணிசமான அளவு குறைந்து உள்ளது. அந்த ஆண்டில் 85,256 பேர் மட்டுமே இந்திய குடியுரிமையை துறந்து உள்ளார்கள். அந்த ஆண்டில் இந்தியா உட்பட உலக நாடுகளில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பும் அதனால் பிறப்பிக்கப்பட்ட ஊரங்கும் இதற்கு காரணமாக இருக்கலாம்.

இரட்டிப்பான எண்ணிக்கை
ஆனால், கடந்த 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகள் இந்த எண்ணிக்கை இரட்டிப்பாகி இருக்கிறது. 2021 ஆம் ஆண்டில் 1,63,370 பேர் இந்திய குடியுரிமையை துறந்து உள்ளார்கள். கடந்த 2022 ஆம் ஆண்டில் இது வரை இல்லாத அளவுக்கு 2,25,620 இந்தியர்கள் தங்கள் குடியுரிமையை கைவிட்டு பிறநாடுகளுக்கு குடிபெயர்ந்து உள்ளனர்.

16.65 லட்சம் பேர்
கடந்த 12 ஆண்டுகளில் மட்டும் 16 லட்சத்து 63 ஆயிரத்து 440 பேர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளதாக அறிவித்து இருக்கும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் 5 இந்தியர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் குடியுரிமையை கடந்த 3 ஆண்டுகளில் பெற்று உள்ளனர் என்றார். அத்துடன் இந்த 16.65 லட்சம் பேரும் குடியுரிமை பெற்று சென்ற 135 நாடுகளின் பட்டியலையும் அவர் வழங்கி இருக்கிறார்.

குடியுரிமை பெற்ற நாடுகள்
இதில் அதிகபட்சமாக கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், இத்தாலி, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கே கடந்த 3 ஆண்டுகளில் இந்தியர்கள் குடியுரிமை பெற்று இருப்பதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் மத்திய இணை அமைச்சர் நித்யானந்த் ராய் வெளியிட்ட தகவலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
எல்பிஜி விஷயத்தில் இந்தியா சொதப்பல்! இனி வரும் நாட்கள் ரொம்ப கஷ்டம்! வார்னிங் வந்துடுச்சு -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில் -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
"இந்தியா எங்கள் நண்பன்! ஹார்முஸை தாராளமாக கடக்கலாம்.." அனுமதி தந்த ஈரான்! உற்று பார்க்கும் அமெரிக்கா












Click it and Unblock the Notifications