கொள்ளிடம் அணைக்கரை பாலம் இடிந்து விழுந்த விவகாரத்தில் நடவடிக்கைகள் என்ன? நிதின் கட்கரி விளக்கம்!
டெல்லி: தமிழ்நாட்டின் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே 2022-ம் ஆண்டு அணைக்கரை பாலம் இடிந்து விழுந்தது தொடர்பாக மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளை லோக்சபாவில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விவரித்தார். மேலும் நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பாலங்களின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய விரிவான இந்திய பால மேலாண்மை அமைப்பை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் உருவாக்கியுள்ளது என்றார் நிதின் கட்கரி.
லோக்சபாவில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளதாவது: தேசிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்தி பராமரிப்பது மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் முக்கிய பொறுப்பாகும். நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் பாலங்கள் இடிந்து விழுந்த சில சம்பவங்கள் நடந்துள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளில் பாலங்கள் இடிந்து விழுந்த விவரங்கள், உயிரிழந்தவர்கள், புலனாய்வுகள் மேற்கொள்ளப்பட்ட விவரம் மற்றும் ஒப்பந்ததாரர்கள் சலுகைதாரர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகியவை பற்றி இணைப்பில் இத்துடன் வெளியிடப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டைப் பொருத்தவரை, 2022-ம் ஆண்டு ஜனவரி 22-ம் தேதி கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அணைக்கரை என்னுமிடத்தில் உள்ள பெரிய பாலத்தின் ஒரு பகுதி கர்டர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விழுந்தது. இது குறித்து உடனடியாக நிபுணர் குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தப் பணியில் சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் நான்கு பேர், பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். மறு உத்தரவு வரும் வரை பணிகள் நிறுத்தப்பட்டன. சம்பந்தப்பட்ட கட்டுமான நிறுவனத்தின் மீது 7.305 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. விழுந்த கர்டரை நிறுவனம் சொந்தச் செலவில் மறுகட்டுமானம் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. கட்டுமான நிறுவனத்திற்கு விதிக்கப்பட்ட அடையாள அபராதமான ரூ.5 லட்சத்தை அந்த நிறுவனம் 29.08.2022 தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் செலுத்தியது.
தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதிக்கான தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுப் பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதன் ஒரு பகுதியாக தற்போதுள்ள பாலங்களின் நிலை குறித்த கணக்கெடுப்பை அமைச்சகம் மேற்கொள்கிறது. பெருவழித்தட மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக தற்போதுள்ள பாலங்களின் பழுதுபார்ப்பு புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தற்போதுள்ள பாலங்களின் ஆய்வு மற்றும் நிலை கணக்கெடுப்பு, அதைத் தொடர்ந்து இடர்பாடுகளின் தன்மை மற்றும் தீவிரத்தின் அடிப்படையில் பொருத்தமான பழுதுபார்ப்பு புனரமைப்பு ஆகியவற்றிற்கான வழிகாட்டுதல்களை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. பாலங்களின் கட்டமைப்பு மற்றும் சுகாதார கண்காணிப்பிற்கான கொள்கை வழிகாட்டுதல்கள் மற்றும் மாதிரி ஏல ஆவணங்களையும் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
பாலங்களின் நிலை மதிப்பீடு மற்றும் பழுதுபார்ப்பு புனரமைப்பு புனரமைப்பு ஆகியவற்றிற்கான அடுத்தடுத்த முடிவுகளை எடுக்கும் செயல்முறைக்காக விரிவான இந்திய பால மேலாண்மை அமைப்பையும் அமைச்சகம் தொடங்கியுள்ளது. நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பாலங்களின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய விரிவான இந்திய பால மேலாண்மை அமைப்பை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் உருவாக்கியுள்ளது. இவ்வாறு நிதி அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications