ரூ.2.72 லட்சம் கோடி மதிப்பிலான 136.13 கோடி 2000 ரூபாய் நோட்டுகள் வாபஸ்- மத்திய அரசு
டெல்லி: ரூ. 2.72 லட்சம் கோடி மதிப்பிலான 136.13 கோடி 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ராஜ்யசபாவில் கேள்வி ஒன்றுக்கு மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் செளத்ரி அளித்த பதில் தொடர்பாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாவது: இந்திய ரிசர்வ் வங்கி சட்டம், 1934 இன் பிரிவு 24 (1)-ன் கீழ் நவம்பர் 10, 2016 அன்று 2000 ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அந்த நேரத்தில் புழக்கத்தில் இருந்த அனைத்து ரூ. 500 மற்றும் ரூ. 1000 ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெற்ற பின்னர் கரன்சி தேவையை விரைவாக பூர்த்தி செய்வதற்காக 2000 ரூபாய் நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன.

இந்த நிலையில் 19.05.2023 தேதி ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில் 2000 ரூபாய் நோட்டுகளில் 89 சதவீதம் மார்ச் 2017 க்கு முன்னர் வெளியிடப்பட்டதாகவும், அவற்றின் ஆயுட்காலம் முடிவடையும் தருவாயில் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி நடத்திய இந்திய அளவிலான ஆய்வின்படி, 2000 ரூபாய் நோட்டுகள் பரிவர்த்தனைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை என தெரியவந்துள்ளது. மேலும், பொதுமக்களின் கரன்சித் தேவையைப் பூர்த்தி செய்ய மற்ற மதிப்புகளில் உள்ள ரூபாய் நோட்டுகளின் கையிருப்பு தொடர்ந்து போதுமானதாக உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டும், ரிசர்வ் வங்கியின் தூய கரன்சி நோட்டுகள் கொள்கைக்கு இணங்கவும், 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற ரிசர்வ் வங்கி முடிவு செய்தது.

ரிசர்வ் வங்கியின் தகவல்படி 2017-ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் 6,57,063 கோடி ரூபாய் மதிப்பிலான 329 கோடி 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. 2023-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 3,62,220 கோடி ரூபாய் மதிப்பிலான 181 கோடி 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன.
2023 மே 19 நிலவரப்படி 3.56 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 177.93 கோடி 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. , 2023 மே 19 முதல் , 2023 ஜூன் 30 வரையிலான காலகட்டத்தில் 2.72 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 136.13 கோடி 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பி வந்துள்ளன. இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications