ராகுலை அமேதியில் தோற்கடித்துவிட்டு, வயநாட்டுக்கும் ‘ஸ்கெட்ச்’ - ஸ்மிருதி இரானியின் திடீர் சுற்றுப்பயணம்

Subscribe to Oneindia Tamil

நேபாளத்தில் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தியின் வீடியோவை பா.ஜ.கவினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த விவகாரத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இதற்கிடையே, ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2019-ல் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி தோற்கடிக்கப்பட்டதை போன்று வயநாட்டிலும் அவருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்த பா.ஜ.க தலைமை ஸ்மிருதி இரானியை களமிறக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஸ்மிருதி இரானி வருகை

ஸ்மிருதி இரானி வருகை

கேரள மாநிலம் வயநாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று, ஒன்றிய அரசின் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதற்காக பா.ஜ.க அமைச்சர் ஸ்மிருதி இரானி வயநாடு வந்துள்ளார். அவர் பழங்குடியினர் பகுதிகளுக்குச் சென்று திட்டங்கள் செயல்படுத்தப்படுவது குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

மேலும், கேரள மாநில பா.ஜ.க ஏற்பாடு செய்துள்ள கூட்டத்திலும் கலந்து கொள்கிறார். ராகுல் நேபாளத்தில் இருக்கும்போது, ஸ்மிருதி இரானியின் வயநாடு வருகை அரசியல் வட்டாரத்தில் முக்கிய விவாதப் பொருளாகியுள்ளது.

திடீர் விசிட் ஏன்?

திடீர் விசிட் ஏன்?

வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி பெரும் வாக்கு வித்தியாசத்துடன் வெற்றி பெற்றார். இந்தநிலையில்தான் பா.ஜ.க அமைச்சர் ஸ்மிருதி இரானி, ராகுல் காந்தியின் தொகுதியான வயநாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

ராகுல் எம்.பியாக இருக்கும் வயநாட்டில் ஸ்மிருதி இரானி சுற்றுப் பயணம் மேற்கொள்வதன் தன் மூலம் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தியை எதிர்த்து அவர் வயநாட்டில் களமிறங்கப் போவதாக கேரளாவில் செய்திகள் அலையடிக்கின்றன.

அமேதியில் ராகுலை வென்ற ஸ்மிருதி

அமேதியில் ராகுலை வென்ற ஸ்மிருதி

கடந்த, 2014ஆம் ஆண்டு உத்தர பிரதேச மாநிலம், அமேதி நாடாளுமன்றத் தொகுதியில் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட்டு தோல்வி அடைந்தவர் இன்றைய பா.ஜ.க அமைச்சரான ஸ்மிரிதி இரானி.

2019 மக்களவைத் தேர்தலில் உ.பியின் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு ஆகிய இரு தொகுதியில் போட்டியிட்டார் ராகுல். அமேதி தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.கவின் ஸ்மிருதி இரானி 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

காங்கிரஸ் வெற்றிக்கு உதவிய வயநாடு

காங்கிரஸ் வெற்றிக்கு உதவிய வயநாடு

அதேநேரம் வயநாட்டில் ராகுல் 65.67 சதவீத வாக்குகள் பெற்று சி.பி.ஐ வேட்பாளர் பிபி சுனீரை வென்றார். பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணி வேட்பாளர் துஷார் வெள்ளப்பள்ளி வெறும் 6.22 சதவீத வாக்குகள் பெற்று டெபாசிட் இழந்தார்.

ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிட்டதன் மூலம் கேரளாவில் அதிகமான இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெறவும் வாய்ப்பாக அமைந்தது. கேரளாவில் 20 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. கடந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 15 இடங்களை கைப்பற்றியது.

ஆனால், சட்டமன்றத் தேர்தலில் இந்த தொகுதியில் உள்ளடங்கிய 7 தொகுதிகளில் நான்கு தொகுதிகளை இடது ஜனநாயக முன்னணி வென்றது. காங்கிரஸ் கூட்டணி மூன்றில் மட்டுமே வென்றது. 7 சட்டசபை தொகுதிகளிலும் பா.ஜ.க கூட்டணி 10 சதவீத வாக்குகளைத் தாண்டவில்லை.

கோட்டையை தகர்க்கத் திட்டம்?

கோட்டையை தகர்க்கத் திட்டம்?

2019-ல் காங்கிரஸின் கோட்டையான அமேதி தொகுதியில் ராகுல் காந்தி தோற்கடிக்கப்பட்டதை போன்று வயநாட்டிலும் அவருக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி, பா.ஜ.க-வை வலுவாகக் காலூன்ற வைக்க பா.ஜ.க தலைமை திட்டமிட்டு ஸ்மிருதி இரானியை களமிறக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.

அடுத்த தேர்தலில் ராகுல் காந்திக்கு நெருக்கடி கொடுத்தால், அந்த தொகுதிக்காகவே காங்கிரஸ் கட்சியினர் அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும். மற்ற தொகுதிகளிலும் சிறப்பாக பணியாற்றி வெற்றிக்கணக்கைத் தொடங்குவோம் என பா.ஜ.கவினர் கணக்கு போடுகின்றனர்.

ராகுலுக்கு பாதிப்பு

ராகுலுக்கு பாதிப்பு

எனினும் காங்கிரஸ் கட்சி கேரளாவில் கட்சியைப் பலப்படுத்தும் வேலைகளில் தீவிரம் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது. காங்கிரஸின் முன்னணி தலைவரான ராகுல் கேரள எம்.பியாக இருந்தும், அக்கட்சியினர் சுணக்கம் காட்டி வருவது தொண்டர்களையும் அதிருப்திக்கு உள்ளாக்கியுள்ளது.

"கடந்த முறையைப் போல அல்லாமல், வயநாட்டில் ராகுல் காந்தி மீண்டும் போட்டியிட்டால் அது அவருக்கு கடினமான காலகட்டமாக இருக்கலாம்" என்று பெயர் வெளியிட விரும்பாத காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

 அரசியல் திட்டம் இல்லை

அரசியல் திட்டம் இல்லை

பாரதிய ஜனதா கட்சி இந்த விஜயத்தில் பொலிடிகல் அஜெண்டா எதுவும் இல்லை என்றும், பழங்குடியினர் பகுதிகளில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் ஒன்றிய அரசின் முயற்சிகளின் தொடர்ச்சி என்றும் கூறியுள்ளது.

ஆனால், ராகுல் காந்தி நேபாளம் சென்றது தொடர்பான வீடியோ பா.ஜ.கவினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நேரத்தில், ஸ்மிருதி இரானியின் வயநாடு வருகை அரசியல் விமர்சகர்கள் மத்தியில் பல்வேறு யூகங்களைக் கிளப்பியுள்ளது உண்மை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+