அன்லாக் 1.0.. ஜூன் 8 முதல் முக்கியமான தளர்வுகள்.. வழிபாட்டு தளங்கள், மால்கள், உணவகங்கள் செயல்படும்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடு முழுக்க 5.0 ஊரடங்கு அமலுக்கு வர உள்ள நிலையில் ஜூன் 8ம் தேதி முதல் முக்கியமான தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுக்க கொரோனா பாதிப்பு அதிகம் ஆகி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் 4 முறை லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டு தற்போது ஐந்தாவது முறையாக லாக்டவுன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த முறை கட்டுப்பாட்டு பகுதியில் மட்டும் லாக்டவுன் நீடிக்கப்பட்டு உள்ளது.

Unlock 1.0: Malls, Religious places and Hotels will be opened in June 8

கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் ஊரடங்கு ஜுன் 30 வரை தொடரும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே உள்ள பகுதிகளில் தளர்வுகள் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தளர்வுகள் மூன்று கட்டமாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக ஜூன் 8ம் தேதி முதல் முக்கியமான தளர்வுகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதன்படி கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே ஜூன் 8ம் தேதியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக தளர்வுகள் அதிகரிக்கப்படும். ஜூன் 8 முதல் வழிபாட்டுதலங்கள், உணவகங்கள், ஷாப்பிங் மால்கள் திறக்க மத்திய அரசு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

முக்கியமாக சுற்றுலா துறையை மீட்கும் வகையில் தங்கும் விடுதிகள் திறக்கப்பட அனுமதிக்க அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தளர்வுகள் கட்டுப்பாட்டு பகுதிக்கு வெளியே மட்டும்தான். மாநில முதல்வர்கள் விரும்பினால் இதில் கூடுதல் தளர்வுகளை கொண்டு வரலாம். சமூக இடைவெளியை கடைப்பிடித்து பணிகளை தொடங்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+