அன்லாக் 4.0.. செப்டம்பர் 30ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், பயிற்சி நிலையங்கள் செயல்படாது!
டெல்லி: செப்டம்பர் 30ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், பயிற்சி நிலையங்கள் செயல்படாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுக்க லாக்டவுன் போடப்பட்டுள்ளது. நாடு முழுக்க கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 5 முறை லாக்டவுன் போடப்பட்ட பின்பும் கூட கொரோனா கேஸ்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்த லாக்டவுன் தளர்வுகள் கொஞ்சம் கொஞ்சமாக அன்லாக் 1, 2, மற்றும் 3 என்று மூன்று கட்டமாக அமலுக்கு வரும் என்று அரசு தெரிவித்தது. இந்த நிலையில் தற்போது கூடுதலாக அன்லாக் 4.0 செயல்முறை அமலுக்கு வந்துள்ளது.
அன்லாக் 4.0 செயல்முறையில் கல்வி நிறுவனங்களை திறக்க அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி செப்டம்பர் 30ம் தேதி வரை பள்ளி, கல்லூரிகள், பயிற்சி நிலையங்கள் செயல்படாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஆன்லைன் முறையில் மட்டுமே மாணவர்கள் கல்வி பயிலலாம். கல்வி நிறுவனங்கள் செயல்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 30 வரை இந்த அன்லாக் செயல்முறைகள் அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்லாக் 2.0ல் கல்வி நிறுவனங்கள் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அன்லாக் 4.0லும் கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications